என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்.. நெருக்கமானவன்.. உருகும் நடிகர் பசுபதி!

சென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் என நடிகர் பசுபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் பசுபதி.

நடிகர் நாசரின் நண்பரான பசுபதி, அவருடைய அறிமுகத்தால் கமலின் மருதநாயகம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

கமலுடன் விருமாண்டி படம்

கமலுடன் விருமாண்டி படம்

மருதநாயகம்தான் தான் கேமரா முன்பு நின்ற முதல் படம் என பல இடங்களில் கூறியுள்ளார் நடிகர் பசுபதி. ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் பாதியிலேயே நிற்கிறது. மருதநாயகம் கைகொடுக்காவிட்டாலும் கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்துள்ளார் பசுபதி.

ரஜினியுடன் குசேலன் படம்

ரஜினியுடன் குசேலன் படம்

இந்த படத்தில் முக்கிய வில்லனாக கொத்தாளத்தேவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினியுடன் குசேலன் படத்தில் நடித்தார் பசுபதி. இதில் ரஜினியின் ஏழை நண்பராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

எந்த கேரக்டர் என்றாலும்

எந்த கேரக்டர் என்றாலும்

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் பசுபதி.

சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட், லீட் ரோல், வில்லன், நகைச்சுவை கதாப்பாத்திரம் என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்து வருகிறார்.
ஹவுஸ்ஃபுல் படம் அவரது நடிப்பில் முதலில் வெளியானது.

கடைசியாக அசுரன் படம்

கடைசியாக அசுரன் படம்

தொடர்ந்து, மாயன், கன்னத்தில் முத்தமிட்டால், தூள், இயற்கை, அருள், விருமாண்டி, சுள்ளான், மதுர, திருப்பாச்சி, மஜா, வெயில், ஈ, ராமன் தேடிய சீதை, குசேலன், அரவான், கொடி வீரன், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரைக்கு வரவேற்பு

சார்பட்டா பரம்பரைக்கு வரவேற்பு

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாம் உள்ளிட்ட வேற்று மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகர் பசுபதி. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரங்கன் வாத்தியாராக பசுபதி

ரங்கன் வாத்தியாராக பசுபதி

சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை வாத்தியாராக ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டரில் பின்னி பெடலெடுத்துள்ளார். தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரங்கன் வாத்தியாராகவே வாழ்ந்துள்ளார் பசுபதி.

ஒவ்வொரு காட்சியிலும் அசத்தல்

ஒவ்வொரு காட்சியிலும் அசத்தல்

குத்துச்சண்டை கற்றுக்கொடுக்கும் காட்சி, கோபப்படும் காட்சி, மகனிடம் ஆர்யாவுக்காக சண்டை போடும் காட்சி, ஆர்யா மீது கோபமாக இருக்கும் காட்சி, ஆர்யா குத்துச்சண்டையில் பங்கேற்கும் காட்சிக்கு முந்தையநாள் இரவு டென்ஷனில் தூங்காமல் தவிப்பது என மிரட்டியிருப்பார் பசுபதி.

ரஞ்சித்தை பாராட்டிய பசுபதி

ரஞ்சித்தை பாராட்டிய பசுபதி

அவரது கதாப்பாத்திரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் பசுபதி சார்பட்டா பரம்பரை படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், இயக்குநர் பா ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

தன்னை செதுக்கியதற்கு நன்றி

தன்னை செதுக்கியதற்கு நன்றி

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் பசுபதி. ரங்கன் வாத்தியாராக தன்னை செதுக்கியதற்கு அவருக்கு தன்னுடைய நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.

திரை வாழ்க்கையில் முக்கியமானவன்

திரை வாழ்க்கையில் முக்கியமானவன்

மேலும் தன் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன் என்றும் தனது கதாப்பாத்திரத்தை பெருமிதத்தோடு கூறியுள்ளார். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் தன்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது என்று ஆர்யாவையும் புகழ்ந்துள்ளார் பசுபதி.

நன்றி கூறிய பசுபதி

நன்றி கூறிய பசுபதி

தன்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் நடிகர் பசுபதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X