Don't Miss!
- News
பாஜகனா அட்வைஸ் தரலாமா? சிடி ரவிக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி.. ட்விட்டரில் கிளம்பிய மோதல்
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இயல்பான சிறந்த நடிகர் ‘பூ‘ ராமு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!
சென்னை : பிரபல நடிகர் 'பூ' ராமு மாரடைப்பு காரணமாக இன்று மாலை 7 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது (60).
Recommended Video
நாடக கலைஞர், எழுத்தாளர் ,நடிகர் பன்முகத் தன்மை கொண்ட ராமு கம்யூனிச சிந்தனைக் கொண்டவர். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நடிகர் பூ ராமுவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நடைபெறுகிறது.
அண்ணாமலை, சூர்யவம்சம்! ஒரே நாளில் வெளிவந்த இரு படங்களுக்கிடையே இப்படி ஒரு ஒற்றுமையா?

‘பூ'ராமு
இயக்குநர் சசி இயக்கிய 'பூ' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், நாடகக் கலைஞர் ராமு. அந்தப் படத்தில் அவர் பேனாக்காரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வண்டிக்காரராக இருந்தாலும், அந்த படத்தில் அனைவரும் அவரை பேனாக்காரன் என்று அழைப்பார்கள். முதல் படத்திலே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்தார் ராமு. முதல் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அனைவரும் இவரை 'பூ' ராமு என அழைத்து வருகின்றனர்.

ஏராளமான படங்களில்
அதனைத் தொடர்ந்து. நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 'பூ' ராமு . குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில், நீ எதுக்கு இங்கே வந்தியோ அதுக்கா படி...இன்னைக்கு உன்னை கேலி, கிண்டல் செய்பவனுக்கு மத்தியில் நீ மேலஏறி வரவேண்டும் என்று கதாநாயகனுக்கு அழகான அறிவுரை கூறுவார். பரியேறும் பெருமாள் படத்தில் இது மிகவும் திருப்புமுனையான வசனமாக இருக்கும்.

சற்றுமுன் உயிரிழந்தார்
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பூ ராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சற்று முன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

நாளை இறுதிச்சடங்கு
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பூ ராமுவின் உடல் ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்படவுள்ளது. பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.