twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு பத்மஸ்ரீ விருது..!

    நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீக்கு நடிகர் பிரபுதேவா தேர்வாகியுள்ளார்.

    |

    சென்னை: நடன இயக்குநராக தன் திரை வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராகி, வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் என்ற நிலைக்கு தன் கடின உழைப்பால் முன்னேறி இன்று நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீக்கு தேர்வாகியுள்ளார் பிரபுதேவா.

    இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா, 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் சுந்தரம் மாஸ்டர் என அழைக்கப்படும் 'முகூர் சுந்தர்' என்பவருக்கும், மகாதேவம்மாவிற்கும்' மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்குபாணி ஆகும். இவருக்கு ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை முகூர் சுந்தர் தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.

    ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் குடும்பம் மைசூரில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தது. தந்தையின் நடனத்துறையில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்ததால், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் போன்றவற்றைக் கற்றார்.

    100க்கும் மேற்பட்ட படங்கள்:

    100க்கும் மேற்பட்ட படங்கள்:

    1988 ஆம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம்' படத்தில், தன்னுடைய தந்தையின் நடன அமைப்பில், ஒரு குழு நடனக் கலைஞராக, திரைப்படத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார் பிரபுதேவா. பின்னர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிவிழா' திரைப்படத்தில், நடன இயக்குனராக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றிய அவர், இந்தியாவின் ‘நடனப்புயல்' எனப் பெயர் பெற்றுள்ளார்.

    ஹீரோ ஆனார்:

    ஹீரோ ஆனார்:

    படங்களுக்கு நடன இயக்குநராக இருந்த அவரை, 1994 ஆம் ஆண்டு பவித்திரன் இயக்கத்தில் வெளியான ‘இந்து' திரைப்படம் நாயகனாக்கியது. அதனைத் தொடர்ந்து, காதலர், ராசய்யா, மின்சாரக்கனவு, விஜபி, ஒன் டூ த்ரீ என தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தார். நடனத்தோடு, அவரது நடிப்பும் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால், தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்தார்.

    வெற்றிப்பட இயக்குநர்:

    வெற்றிப்பட இயக்குநர்:

    நடன இயக்குனராகவும், கதாநாயகனாகவும் வளம்வந்துக் கொண்டிருந்த அவர், ‘நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா' என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக மாறினார். 2005 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் அவருக்கு, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து, ‘பௌர்ணமி' (தெலுங்கு), ‘போக்கிரி' (தமிழ்), ‘வில்லு' (தமிழ்), ‘வாண்டட்' (இந்தி), ‘எங்கேயும் காதல்' (தமிழ்), ‘வெடி' (தமிழ்) போன்ற திரைப்படங்களை இயக்கினார். 2012 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘ரவுடி ராத்தோர்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று இந்திய சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் எனப் பதிவு செய்யப்பட்டது.

    தேசிய விருது:

    தேசிய விருது:

    ‘மின்சார கனவு' திரைப்படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலுக்கு அவர் ஆடிய நடனத்திற்காக ‘தேசிய விருது' பெற்றார். ‘லக்ஸ்ஷயா' (இந்தி) திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது', ‘போக்கிரி' திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஃபிலிம்பேர் விருது' உள்பட ஏராளமான விருதுகளை வாங்கியிருக்கிறார் பிரவுதேவா.

    காதல் திருமணம்:

    காதல் திருமணம்:

    பிரபுதேவா அவர்கள், ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு ‘ரமலத்' என்ற பெயரை ‘லதா' என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த மகன் 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ரமலத்தை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

    பத்மஸ்ரீ விருது:

    பத்மஸ்ரீ விருது:

    தற்போது மீண்டும் தமிழில் நடித்து வருகிறார். விரைவில் படங்களை இயக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஒரு குரூப் டான்ஸராக தனது வாழ்வை தொடங்கி, நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என உயர்ந்தவர் பிரபுதேவா. அவரை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருப்பது திரைத்துறையினரை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. அவருக்கு திரைப்பிரலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor, choreographer and director Prabhu deva has been honoured with Padma shree awards by the central government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X