»   »  பிரபுதேவாவுடன் தமிழுக்கு வரும் பாலிவுட்டின் பாரா கான்!

பிரபுதேவாவுடன் தமிழுக்கு வரும் பாலிவுட்டின் பாரா கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

90'களில் நடனத்திற்கும், நடிப்பிற்கும் இவர் பிரபலமானவர் என்று புகழப்பட்டவர் பிரபு தேவா. சில வருடங்களுக்கு முன், பல்வேறு சர்ச்சைகள், அடுக்கடுக்கான பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா இடையில் சற்று காணாமல் போய் விட்டார்.

தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்த படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

Actor Prabudeva and Farah Khan Played in director vijay's movie

ஏற்கனவே இந்த படத்தை பற்றிய தகவல்கள் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவி கொண்டிருக்கும் நிலையில் தற்போது, இந்தியாவின் முன்னணி நடன இயக்குனரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குனராக மட்டுமில்லாமல் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் இவர் நடிக்கிறார்.

"பிரபு தேவா, தமன்னா, பவுல் ஆரோன், பாரா கான் மற்றும் சோனு சூட். இதை விட ஒரு இயக்குனருக்கு வேற என்ன வேண்டும்? இந்த மாபெரும் நட்சத்திர கூட்டணியில் நான் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.

பொதுவாகவே திகில் படமென்றால் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. ஆனால் DEVI(L) திரைப்படம் அப்படி இல்லாமல் மக்களின் ரசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் முழுவதும் பூர்த்தி செய்யும் வண்ணமாக செதுக்கப்பட்டு வருகிறது. படத்தின் ஒரு காட்சிக்கு, நடன கலைஞராக நடிக்கும் கதாப்பாத்திரம் தேவைப்பட்டது.

பாரா கானை தவிர வேறு யார் அந்த வேடத்தை மிக எதார்த்தமாக நடிப்பது? எனவே அவரையே அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டோம். இப்படிப்பட்ட பிரம்மாண்ட கலை குழுவினருடன் நான் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து, எனக்கு நல்லதொரு ஊக்கத்தையும், பொருளாதார ரீதியாக பக்கபலமாகவும் செயல்பட்டு வரும் எங்கள் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்

கணேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்கிறார் இயக்குனர் விஜய்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தில், சுவாரசியங்களுக்கும், திருப்பங்களுக்கும் எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாக சொல்லலாம்.

English summary
One of the leading choreographer Farah Khan who is best known for her dance work in numerous Bollywood films makes a special appearance for the first time in a Tamil film, Devi(L) starring Prabhu Deva, Tamannaah,and Sonu Sood. Devi[L] has created more expectations with the casting coup as well as the innovative title among the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil