ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை... பட்டென போட்டுடைத்த பிரபல நடிகர்!

சென்னை: ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை என பிரபல நடிகர் தனது படம் குறித்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

ரசிகர்கள்னாலே பிரச்சனைதான் | Actor Prabhu Deva Speech | Thael Movie Audio Launch | Filmibeat tamil

தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் பிரபு தேவா. நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள பிரபு தேவா முன்னணி நடிகர்களை இயக்கியும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இதேபோல் நடன இயக்குநராகவும் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். இந்நிலையில் பிரபு தேவாவின் நடிப்பில் ஏராளமான படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

தேள் படம் விரைவில்

தேள் படம் விரைவில்

அந்த வகையில் பொன் மாணிக்கவேல் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனை தொடர்ந்து பஹீரா படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதேபோல் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.

அற்புதமான உழைப்பு

அற்புதமான உழைப்பு

இந்தப் படத்தை ஹரிகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபு தேவா இப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்.

நீங்கள் எதிர்பார்ப்பது இல்லை

நீங்கள் எதிர்பார்ப்பது இல்லை

இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

வழக்கமான நடிப்பு இல்லை

வழக்கமான நடிப்பு இல்லை

இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான நடிப்பு இருக்க கூடாது என்பதில் ஹரிகுமார் உறுதியாக இருந்தார். எங்காவது வழக்கமான நடிப்பு வெளிப்பட்டால் அதனை உடனடியாக மாற்றிவிடுவார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்' என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X