பார்ம் ஹவுஸில் ஜாலியோ ஜிம்கானா... வாரிசு பட நடிகரின் அட்ராசிட்டி... ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.
இவர் தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், விஜய் பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
இந்நிலையில், பிரகாஷ் ராஜ் அவரது பண்ணை வீட்டில் அடித்த அட்ராசிட்டிகள் புகைப்படங்களாக வெளியாகி வைரலாகியுள்ளன.

 செல்லமான வில்லன்

செல்லமான வில்லன்

கே பாலசந்தர் இயக்கிய டூயட் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். கன்னட திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்த பிரகாஷ் ராஜ், முன்னணி நடிகராக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் உட்பட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு தரமான வில்லனாகவும், முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார். வில்லத்தனத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்ட பிரகாஷ்ராஜ், அபியும் நானும், அசுரன், ஜெய்பீம் போன்ற படங்களில் மிக அழுத்தமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

 வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ்

வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ்

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் தான் விஜய்க்கு வில்லன் என சொல்லப்படுகிறது. கடந்த வாரம் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், விஜய் உடனான நட்பு குறித்தும் பேசியிருந்தார். கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியிருந்தார் பிரகாஷ் ராஜ். மீண்டும் அப்படியொரு தரமான சம்பவம் வாரிசு படத்தில் அரங்கேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 பண்ணை வீட்டில் ஜாலி

பண்ணை வீட்டில் ஜாலி

நடிகராக இருந்தாலும் தொடர்ச்சியாக அரசியல் ரீதியான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பேசி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பிரகாஷ் ராஜின் அரசியல் விமர்சனங்களும் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், பிரகாஷ் ராஜ் தற்போது தனது பண்ணை வீட்டில் இருக்கும் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், பிரகாஷ் ராஜுடன் அவரது மனைவி போனி வர்மா, மகன், மகள்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.

 முதல் மனைவியின் மகள்கள்

முதல் மனைவியின் மகள்கள்

பிரகாஷ் ராஜ் முதலில் பிரபல நடிகை லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்தனர். அதனைத் தொடர்ந்து 2010ல் பாடகி போனி வர்மாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். லலிதா குமாரி மூலம் பிரகாஷ் ராஜுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், போனி வர்மா மூலம் மகன் ஒருவரும் பிறந்தார். இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி, மகள்கள், மகனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

 வைரலாகும் புகைப்படங்கள்

வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில், தற்போது பேமிலி டைம் என்ற கேப்ஷனுடன் தனது டிவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ். அதில் குளிர் காலத்தில் மதிய நேரத்தில்... இது போல் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மிகவும் ஆனந்தமானது என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் பிரகாஷ் ராஜின் மகள்களும் உள்ளனர். அதேபோல் மனைவி போனி வர்மா, மகன் ஆகியோரும் இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X