»   »  இத்தனை கொடுமைகளை சீர்செய்யாமல் சிரியாவுக்காக உச்சுக்கொட்டுவதா? - பிரசன்னா விளாசல்!

இத்தனை கொடுமைகளை சீர்செய்யாமல் சிரியாவுக்காக உச்சுக்கொட்டுவதா? - பிரசன்னா விளாசல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிரியாவுக்காக உச்சுக்கொட்டுவதா? - பிரசன்னா விளாசல்!- வீடியோ

சென்னை : சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளனர். நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக கருத்துகளை வெளியிடுவார்.

விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் அடையாள தெரியாத கும்பல் ஒன்று ஆராயி, அவரது, மகன், மகள் ஆகியோரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் 8 வயது சிறுவன் பரிதாபமாகப் பலியானான்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் பிரசன்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மதுக்களும், ஆராயிகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் ஊரைச் சீர்செய்யாமல் சிரியாவை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? என விளாசியிருக்கிறார் பிரசன்னா.

ஆராயி குடும்பம்

ஆராயி குடும்பம்

விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஆராயியின் 8 வயது மகனைக் கொலை செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

ஆராயி வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து ஆராயி, அவரது மகன், மகள் ஆகிய 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியஐக் கிளப்பியது.

சிறுவன் பலி

சிறுவன் பலி

இந்த தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். ஆராயி மற்றும் கடைசி மகள் தனம் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிறுமி தனம் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

வெறிச்செயல்

வெறிச்செயல்

இந்த வெறிச்செயல் நிலத் தகராறு தொடர்பாக நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் போலீஸார் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திசை திருப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பிரபலத்தின் மரணத்தால் பேசப்படவில்லையா

இந்தச் சம்பவத்தைப் பற்றி வேதனையுடன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் பிரசன்னா. "விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரது 8 வயது மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா.. அல்லது வேறு காரணமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நம் முற்றத்தைச் சீர்செய்யாத நாம்...

நம் முற்றத்தைச் சீர்செய்யாத நாம்...

மதுக்களும், ஆராயிகளும், பிள்ளைக் கொலைகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர்செய்யாத நாம் சிரியாவின் படுகொலைகலை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

English summary
At Thirukovilur near Villupuram, some brutally attacked Aarayi, her son and daughter. Actor Prasanna has tweeted about this incident on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil