twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த பிரசாந்த்.. அப்பறம் எப்படி நடிக்க வந்தாரு தெரியுமா?

    |

    சென்னை : இயக்குனர் தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முக தன்மை கொண்டவர் தியாகராஜன்.

    இவர் பாரதிராஜா இயக்கத்தில்1981ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் டேவிட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    அதனைத் தொடர்ந்து சேலம் விஷ்ணு ,மலையூர் மம்பட்டியான் , ஆணழகன், பொன்னர் சங்கர் , நீங்கள் கேட்டவை,, என்னைப்பார் என் அழகைப்பார், சங்கரி ,நெஞ்சங்கள், நல்ல நாள் என பல படங்களில் நடித்தும்.சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

    இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்... திருமணம் எப்போ தெரியுமா ? இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்... திருமணம் எப்போ தெரியுமா ?

    இவ்ளோ பெரிய பையனா?

    இவ்ளோ பெரிய பையனா?

    தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியும் நடித்தும் இருக்கிறார் தியாகராஜன். ஒரு நாள் சென்னையில் உள்ள தியாகராஜனின் வீட்டிற்கு திரைப்பட நடிகர் சத்யராஜ் தன்னுடைய தங்கையின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்கு சென்றிருக்கிறார்.அப்போது நடிகர் தியாகராஜன் வீட்டில் இல்லாததால் தியாகராஜனின் மகன் பிரசாந்ததை நடிகர் சத்யராஜ் சந்தித்திருக்கிறார். அப்போதுதான் தியாகராஜனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்பதை அவர் ஆச்சரியத்தோடு கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.

    அறிமுகம் இல்லை

    அறிமுகம் இல்லை

    அந்த சம்பவம் நடக்கும் வரை நடிகர் தியாகராஜன், திரை உலகத்திற்கோ, மீடியாக்களுக்கோ தங்கள் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியது இல்லை. பிரசாந்தை பார்த்துச் சென்ற சத்யராஜ் தியாகராஜனுக்கு இப்படி ஒரு மகன் இருப்பதாக தனக்கு தெரிந்த இயக்குனர் வட்டாரத்தில் சொல்லி வைக்க, அதைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் தியாகராஜன் வீட்டிற்கு பிரசாந்தை நடிக்க கேட்டு படையெடுத்து இருக்கிறார்கள்.

    பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த்

    பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த்

    அப்படியாகத்தான் இயக்குனர் பாலுமகேந்திரா, தியாகராஜன் வீட்டிற்குச் சென்று நான் "வண்ண வண்ண பூக்கள்" என்கிற திரைப்படத்தை இயக்க இருக்கிறேன் அதில் பிரசாந்த் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தியாகராஜன், பிரசாந்த் மருத்துவம் படிக்க போவதாகவும் அவருக்கு சினிமாவின் மீது நாட்டம் இல்லை எனவும் அவரது அழைப்பை மறுத்து இருக்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து பிரசாந்தை நடிக்க கேட்டு பல இயக்குனர்கள் படையெடுக்க வேறு வழி இல்லாமல் வைகாசி பொறந்தாச்சு, மலையாளத்தில் அஜயன் இயக்கத்தில் பெருந்தச்சன் போன்ற படங்களில் பிரசாந்த் நடித்து இருக்கிறார்.

    ஷாக்கான பாலுமகேந்திரா

    ஷாக்கான பாலுமகேந்திரா

    இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாலுமகேந்திரா மீண்டும் தியாகராஜனை தொடர்பு கொண்டு உங்களை வைத்து "நீங்கள் கேட்டவை" என்கிற வெற்றிப் படத்தை தானே தந்திருக்கிறேன் அன்று பிரசாந்தை நான் நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டு, தற்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஏன் என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டிருக்கிறார். அப்படியாக பாலுமகேந்திரா இயக்கத்தில் "வண்ண வண்ண பூக்கள்" திரைப்படத்தில் பிரசாந்த் நடித்து இருக்கிறார்.

    வெற்றி நாயகன்

    வெற்றி நாயகன்

    அதன் பிறகு உனக்காக பிறந்தேன், செம்பருத்தி, ஐ லவ் யூ, எங்க தம்பி ,கிழக்கே வரும் பாட்டு, திருடா திருடா, ஆணழகன் ,கல்லூரி வாசல், ஜீன்ஸ்,பார்த்தேன் ரசித்தேன் , ஸ்டார் ,மஜ்னு ,ஜோடி . போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். "ஐ லவ் யூ" என்ற ஹிந்தி படத்தின் துவக்க விழாவிற்கு அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா சிறப்பு விருந்தினராக வந்தது குறிப்பிடத்தக்கது . சமீபகாலமாக பிரசாந்த் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிகரும் இயக்குனருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படம் விரைவில் வெளிவர உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அந்தகன் பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    இயக்குனர் பாலுமகேந்திரா, தியாகராஜன் வீட்டிற்குச் சென்று நான் "வண்ண வண்ண பூக்கள்" என்கிற திரைப்படத்தை இயக்க இருக்கிறேன் அதில் பிரசாந்த் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தியாகராஜன், பிரசாந்த் மருத்துவம் படிக்க போவதாகவும் அவருக்கு சினிமாவின் மீது நாட்டம் இல்லை எனவும் அவரது அழைப்பை மறுத்து இருக்கிறார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X