Premgi: பிரேம்ஜி தந்தையானாரா? இணையத்தில் பரவும் தகவல்.. குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பல திறமைகளைக்கொண்ட பிரேம்ஜிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவர் அப்பாவாகி இருப்பதாக தகவல் இன்று இணையத்தில் பரவி வருகிறது

இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன், 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான "நியாபகம் வருதே" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகராகவும் பல வெற்றி பெற்ற பாடல்களை பாடியுள்ளார். அதன் பின் சிம்பு நடித்த வல்லவன் படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் சென்னை 600028 படத்தில் சீனு என்ற ரோலில் நடித்தார். அதைத்தொடர்ந்து, மங்காத்தா, கோவா, சரோஜா, மாநாடு என அடுத்தடுத்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று தனி இடம் பிடித்தார்.

premgi amaran indhu premgi baby
Photo Credit:

பிரேம்ஜி திருமணம்: பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவிற்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். ஆனால், பிரேம்ஜி 45 வயதான போதும், திருமணம் செய்து கொள்ளாமல், முரட்டு சிங்கிளாக சுற்றிக்கொண்டு இருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருத்தணியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து வங்கியில் சந்தித்த போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

பரவும் செய்தி: இவர்களின் முதலாம் ஆண்டு திருமணம் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது பிரம்ஜி அமரன் அப்பாவி உள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமிம் ஸ்டோரியில் செப்டம்பர் 4.44 என பதிவிட்டுள்ளார். ஒருவேலை குழந்தை பிறந்த நேரத்தை தான் அவர் அவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா என இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X