»   »  மெளண்ட் ரோடு கலர் கண்ணாடியும்.. ஒரு "மாங்கா மடையனும்"!

மெளண்ட் ரோடு கலர் கண்ணாடியும்.. ஒரு "மாங்கா மடையனும்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அவதாரம் என்பது அசாதாரணமான விஷயத்தைக் குறிப்பதாகும்.... அந்த வகையில், பிரேம்ஜியும் இப்போது மகா அவதார் ஆகி விட்டார்.. ஆம். அவரும் இப்போது ஹீரோ (பேக்கிரவுண்ட்டில் ஷெனாய் சத்தமும் கேட்டீங்களா).

அந்தப் புதிய அவதாரத்தை நாம் எல்லோரும் கட்டாயம் பார்த்துத்தான் ஆக வேண்டும், தாங்கித்தான் தீர வேண்டும். காரணம், படம் சீக்கிரமே திரைக்கு வரப் போகிறது.

யோக்கியன் வரான்.. சொம்பை எடுத்து உள்ளே வை என்று கூறுகிற அளவுக்கு படமெல்லாம் பயங்கரமாக வேறு இருக்கிறது.

[மாங்கா படங்கள்]

இரட்டை வேடம்...

இரட்டை வேடம்...

பிரேம்ஜிக்கு இதில் 2 வேடமாம். தலா ஒரு நாயகி வேறு. ஒருவர் அத்வைதா.. அத்வைதாவும் அவரும் காணப்படும் ஒரு காட்சியில், அத்வைதா சின்னப் பூ போல காட்சி தருகிறார்.. பிரேம்ஜியோ நாட்டாமை உட்கார்ந்து தீர்ப்பு சொல்லும் பெரிய ஆலமரம் போல காணப்படுகிறார்.

எவ்ளோ பெரிய கண்ணாடி...

எவ்ளோ பெரிய கண்ணாடி...

அமரன் போட்டுள்ள கலர் கண்ணாடியை எங்கு வாங்கினார்கள் என்று தெரியவில்லை. பஸ் கண்ணாடி போல பெரிதாக இருக்கிறது. அவரு பாடிக்கு ஏற்ற கண்ணாடியாக தேடிப் பிடித்து வாங்கியிருப்பார்கள் போல. மெளன்ட் ரோடு பக்கம் இப்படிப்பட்ட கண்ணாடிகள் அதிகம் கிடைக்கும்.

என்ன கொடுமை சார் இது....

என்ன கொடுமை சார் இது....

அந்த என்ன கொடுமை சார்.. இதை இந்த ஜென்மத்தின் கடைசி சீன் வரை விட மாட்டார் போல இருக்கிறது பிரேம்ஜி. இதிலும் பிச்சு உதறியிருக்கிறார்.

பயங்கர காமெடியாம்...

பயங்கர காமெடியாம்...

நரைத்த தலை கெட்டப்பில் ஒரு பாட்டு சீன். பார்க்க பயங்கரமாக இருந்தாலும் காமெடியாக எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.. படம் பார்த்த பிறகுதான் தெரியும் சிரிப்பு வருதா இல்லையான்னு.

இது எதுக்குங்க...?

இது எதுக்குங்க...?

கட்டம் போட்ட லுங்கி, குற்றால சிவப்புத் துண்டு சகிதம் காட்டுப் பக்கமாக ஒரு காட்சி தருகிறார் பிரேம்ஜி. ஒதுங்கப் போனாரோ.. எதுக்குப் போனாரோ...

அழகு... அமர்க்களம்...

அழகு... அமர்க்களம்...

அத்வைதா அழகு.. அமர்க்களம்.. அம்சம்.. தனியாக பார்க்கும்போது ரசிக்க முடிகிறது.. பிரேம்ஜியோடு சேர்த்துப் பார்க்கும்போது சற்றே வலி வருகிறது.. .மனதில்!

நாதா...

நாதா...

பாகதவர் கெட்டப்பில் பிரேம்ஜியின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் போலவே இருக்கிறார் பிரேம்ஜி. கன கச்சிதமான மேக்கப்.. இந்த கேரக்டரை வைத்து நாதா.. நாதி என்று பேச வைத்திருப்பார்கள் என்று நம்பலாம்.

என்ன ஒரு லுக்கு....

என்ன ஒரு லுக்கு....

கொஞ்சும் புறாவும்.. கொடூர பிரேம்ஜியும் என்று இந்த ஸ்டில்லுக்குப் பெயர் வைக்கலாம்.. கறி போடப் போவது போலவே ஒரு கொடூரப் பார்வை பார்க்கிறார் பிரேம்ஜி... புறா பாவம்ஜி!

அது தான் பெயரிலேயே இருக்கிறதே...

அது தான் பெயரிலேயே இருக்கிறதே...

சில போஸ்களைப் பார்க்கும்போது பிரேம்ஜிக்கே சங்கோஜமாக இருக்கக் கூடும்..

ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்லனும் சார்... கெட்டப்களுக்கு ஏற்ற முகமாகத்தான் பிரேம்ஜி முகம் இருக்கிறது.. இருக்காதா பின்னே.. அவது பெயரிலேயே "பிரேம்" இருக்கே!

    English summary
    Premji’s forth coming film is Maanga in which he will be seen in dual role.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil