»   »  ராக்கெட் விட்டு ஓசோன் ஓட்டையை அடைத்தானா சிவா....??

ராக்கெட் விட்டு ஓசோன் ஓட்டையை அடைத்தானா சிவா....??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : என்ன கொடுமை சார் இது.. இதை வைத்தே பல படங்களை ஓட்டி விட்ட பிரேம்ஜி அமரன் இப்போது ஹீரோ... அவரும் ஒரு படத்தில் டூயட் ஆடி, டான்ஸ் ஆடி, சண்டை போட்டு அசத்தியுள்ளார்.

அந்தப் படம்தான் மாங்கா. பெயருக்கேற்றார் போலத்தான் பிரேம்ஜியின் கேரக்டரும். இருந்தாலும் கடைசியில் அதி புத்திசாலியாக அவர் உருவெடுக்கிறாராம்.

அத்வைதா, லீமா என இரு நாயகிகளுடன் பட்டையைக் கிளப்பும் பிரேம்ஜி இப்படத்தில் இரு வேடங்களில் அசத்தியுள்ளார்.

ஒரு நாயகன்

ஒரு நாயகன்

இப்படத்தில் பழைய காலத்து பாகவதராகவும், இளம் விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் வருகிறாராம் பிரேம்ஜி.

2 நாயகிகள்

2 நாயகிகள்

படத்தில் இரு நாயகிகள். லீமா மற்றும் அத்வைதா. இவர்கள் தவிர இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

பெரிய அப்பாடக்கர் போல

பெரிய அப்பாடக்கர் போல

இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.

மக்களுக்கு கஷ்டமோ கஷ்டம்

மக்களுக்கு கஷ்டமோ கஷ்டம்

இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

பாகவதர் பிரேம்ஜி

பாகவதர் பிரேம்ஜி

இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி) யை சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது.

ஜெயிப்பது யார்

ஜெயிப்பது யார்

இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை என்றார் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா.

மீசிக்கும் இவரே

மீசிக்கும் இவரே

இப்படத்தின் இசையமைப்பாளரும் பிரேம்ஜி அமரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Premji’s forth coming film is Maanga in which he will be seen in dual role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil