»   »  ஜோசியம் பலிக்கப் போகுதாம்... ப்ரேம்ஜியும் அரசியலுக்கு வர்றாராம்!

ஜோசியம் பலிக்கப் போகுதாம்... ப்ரேம்ஜியும் அரசியலுக்கு வர்றாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆர்கே நகர் இடைதேர்தலின் காமெடி போர்ஷனைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர் கங்கை அமரன். இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட கங்கை அமரனை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே நான் எம்.எல்.ஏ நாற்காலியில் இப்போதே அமர்ந்துவிட்டதாக கனவு காண்கிறேன் என்று சொல்லி மீம்ஸ்களுக்கு தீனியானார்.

Actor Premgi enters to politics

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ரீமிக்ஸ் பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்தார். ஆனால் அந்தோ பரிதாபம்... அதெல்லாம் ஓட்டுகளாக மாறுவதற்கு முன்பே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.

இப்போது ஒரு பேட்டியில் தனது மகன் ப்ரேம்ஜியும் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று சொல்லியிருக்கிறார். சின்ன வயதில் ஜாதகம் பார்த்தபோது வெங்கட்பிரபு இயக்குநர் ஆவார் என்றும் ப்ரேம்ஜி முதலில் இசையமைப்பாளர், பின்னர் நடிகர் எதிர்காலத்தில் அரசியலுக்கும் போவார் என்று சொல்லப்பட்டதாம். அவர்கள் சொன்னதில் ப்ரேம்ஜி அரசியலுக்கு வருவது மட்டும்தான் பாக்கி என்று சொல்லியிருக்கிறார்.

ஸோ அந்த லிஸ்ட்ல ப்ரேம்ஜியும் இருக்கார்?

English summary
Gangai Amaran says that his son actor Premgi also have chances to enter politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos