Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 5 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படியொரு ஆசையில் 'அருப்புக்கோட்டை' பிரேம்ஜி... களைகட்டும் காமெடி
சென்னை: பிரேம்ஜி அமரன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம், அருப்புக் கோட்டை பின்னணியில் காமெடி படமாக உருவாகிறது.
விதார்த், ரவீனா ரவி நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்தப் படத்துக்குப் பின், அடுத்த படத்தை இயக்குகிறார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கிறார்.
கன்னக் குழி அழகியின் கலகல புகைப்படங்கள்.. கலக்கும் சிருஷ்டி!

பிளாக் காமெடி
இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. இந்தப் படம் பற்றி இயக்குனர் சுரேஷ் சங்கையாவிடம் கேட்டபோது, இது ஒரு பிளாக் காமெடி படம். என் கதைக்கு பிரேம்ஜி அமரன் பொருத்தமாக இருந்ததால் அவரை நடிக்க வைக்கிறோம் என்றார்.

வெளிநாட்டு ஆசை
அவர் மேலும் கூறும்போது, அருப்புக் கோட்டையை சுற்றி நடக்கும் கதையை கொண்ட படம் இது. கிராமத்து கதைதான். பிரேம்ஜி, வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசையில், அதற்கான முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார்.

கிராமத்து வாழ்க்கை
அவர் எதேச்சையாக ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. இதை எந்தளவுக்கு சுவாரஸ்யமாகச் சொல்கிறோமோ, அப்படி சொல்கிறோம். யதார்த்தமான கிராமத்து வாழ்க்கையாக இந்தப் படம் இருக்கும்.

ஸ்வயம் சித்தா, ரேஷ்மா
ஸ்வயம் சித்தா ஹீரோயினாக நடிக்கிறார். பிக்பாஸ் ரேஷ்மா, கு.ஞானசம்மந்தன், சித்தன் மோகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். 80 வயது லட்சுமி பாட்டி ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சரண் ஒளிப்பதிவு செய்கிறார். தொடர்ந்து 30 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார். சூப்பர் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சமீர் பரத்ராம் தயாரிக்கிறார்.