Don't Miss!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance
துவரம், உளுத்தம் பருப்பு விலை 15% உயர்வு.. நெல் சாகுபடி சரிவு..!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
வில்லன் அஜித்... ஹீரோ விஜய்... வெறித்தனமான ட்ரெயிலர்... மிரண்ட பிரேம்ஜி!
சென்னை :ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களது ஸ்டைலையும் நடிப்பையும் நிரூபித்து தற்போது வரையில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
அடுத்த சூப்பர் ஹீரோக்களாக நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் தற்போது காணப்படுகின்றனர். இவர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் இணைத்து படம் செய்ய வேண்டும் என்று பல இயக்குநர்கள் தங்களது ஆசைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலை: கமல், சத்யராஜ், குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்கள் நெகிழ்ச்சி

ரசிகர்களை கவர்ந்த ரஜினி -கமல்
நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் சிறப்பான வகையில் தங்களை நடிகர்களாக நிரூபித்தவர்கள். ரஜினி ஸ்டைலைக் காட்டி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தன்னுடைய நடிப்பை மட்டுமே பிரதானமாக வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் கமல்ஹாசன். தொடர்ந்து அவர் நடித்து வருகிறார். விரைவில் அவரது விக்ரம் படம் ரிலீசாக உள்ளது.

முன்னணி நடிகர்கள் விஜய் -அஜித்
இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோக்களின் வரிசையில் முதன்மை இடத்தில் விஜய் மற்றும் அஜித் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு இடையில் அவ்வப்போது தங்களது ஹீரோக்களை வைத்து மோதல்களும் காணப்படுகின்றன.

வசூல் ஹீரோக்கள்
அடுத்த நிலையில், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இருந்தாலும் விஜய் மற்றும் அஜித்தை மாஸ் ஹீரோக்களாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிறப்பான வசூலை தொடர்ந்து குவித்து வருகின்றன.

தயாரிப்பாளர்கள் ஆர்வம்
இதற்கு சமீபத்திய உதாரணங்களாக பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள் காணப்படுகின்றன. இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. வெற்றிக்கான இந்த உத்தரவாதமே தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இவர்களை வைத்து படங்களை இயக்குவதற்கு காரணமாக உள்ளது.

ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம்
ஒரு படத்திற்கு இவர்கள் இருவரும் வாங்கும் சம்பளமும் 100 கோடிக்கு மேல் உள்ளது. ஆயினும் இவர்களை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இயக்குநர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

மங்காத்தா 2 ட்ரெயிலர்
அந்த வரிசையில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜமௌலி உள்ளிட்டவர்களும் விஜய் மற்றும் அஜித்தை இணைந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது விஜய் மற்றும் அஜித் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிப்பதாக ஒரு ட்ரெயிலர் உருவாக்கப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

வில்லன் அஜித் -ஹீரோ விஜய்
அந்த ட்ரெயிலரில் அஜித் வில்லனாக காட்டப்படுகிறார். மங்காத்தா உள்ளிட்ட அவரது படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விஜய் அவரை தேடும் போலீசாக ஹீரோவாக காட்டப்படுகிறார். அஜித்திற்கு நயன்தாராவும், விஜய்க்கு சமந்தாவும் நாயகிகளாக உள்ளனர். அஜித் -விஜய்க்கு காம்பினேஷன் காட்சிகளும் ட்ரெயிலரில் காணப்படுகிறது.

பிரேம்ஜி உற்சாகம்
விஜய் -அஜித் என்ற மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடித்தால் அந்தப் படம் சிறப்பாக இருக்கும் என்று எப்போதுமே கோலிவுட்டில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்ரெயிலர் பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகர் பிரேம்ஜி, நெருப்பு எமோஜியை தன்னுடைய கேப்ஷனில் இணைத்துள்ளார்.

அதிக பட்ஜெட்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகின்றனர். இதனால் இப்படி ஒரு படம் உருவாக வேண்டுமென்றால் அவர்களது சம்பளமே 250 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும் என்றும் இந்தப் பதிவில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.