ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டு ஓப்பனாக சவால் விட்ட ஆர்.கே.சுரேஷ்
சென்னை : வலிமை படத்தையும், அஜித்தையும் மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை, ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் நார் நாராக கிழித்து தொங்க விட்டதுடன் ஓப்பனாக சவாலும் விட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். ஆனால் இவர் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து, விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Recommended Video
டைரக்டர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடித்துள்ள படம் மாயன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் உருவாக்கப்பட்ட திகில் படம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், அஜித்தை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை மிக கடுமையாக தாக்கி பேசியதுடன், மேடையிலேயே ஓப்பனாக சவாலும் விட்டுள்ளார்.

மீடியாக்களுக்கு வேண்டுகோள்
ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், ரஜினி, விஜய், அஜித், சிம்பு படங்களை தூக்கி பிடிக்க 100 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற சிறிய படங்களை மீடியாக்கள் தான் ஆதரவு தந்து தூக்கி பிடித்து, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நீங்கள் மட்டும் தான் உள்ளீர்கள். இந்த படைப்பை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். தன்னை தானே உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களை போன்றவர்களுக்கு தான் தெரியும்.

மீடியாக்களுக்கு வேண்டுகோள்
ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், ரஜினி, விஜய், அஜித், சிம்பு படங்களை தூக்கி பிடிக்க 100 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற சிறிய படங்களை மீடியாக்கள் தான் ஆதரவு தந்து தூக்கி பிடித்து, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நீங்கள் மட்டும் தான் உள்ளீர்கள். இந்த படைப்பை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். தன்னை தானே உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களை போன்றவர்களுக்கு தான் தெரியும்.

ஓடிடி.,க்களை ஓட்டிய ஆர்.கே.சுரேஷ்
பெரிய நடிகர்களின் படங்களை போட்டி போட்டு வாங்கி விட்டு, ஒரே நாளில் பிளாக் ஆவதை விட, இது போன்ற 50 நல்ல படங்களை வாங்கி ஓடிடி தளங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும். 500 படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது. என் படங்களை ஓடிடியில் வாங்கிவில்லை என்றால் கூட எனக்கு கவலையில்லை. நல்ல படங்கள் மக்களிடம் போய் சேர்ந்து, அவர்கள் தூக்கி விட்டால் போதும். ஒரு படம் தோல்வி அடைந்ததால் தர்மதுரை படத்தை, நான் தயாரித்ததில் 25 சதவீதத்திற்கு கேட்டார்கள். அதே படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தோம் 30 கோடி வசூலானது. மக்கள் கையில் மட்டும் தான் உள்ளது.

சினிமாவை விட்டே போகிறேன்
விமர்சனம் செய்பவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன். கண்டபடி விமர்சனம் செய்யாதீர்கள். குறைகளை சொல்லுங்கள் திருத்தி கொள்ளலாம். அதற்காக மோசமாக விமர்சிக்கக் கூடாது. அஜித் சாரை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது. நீங்க என்ன தான் என் படத்தை வைத்து கிண்டலடித்தாலும், கிழித்தாலும், விமர்சித்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு மனிதனின் உடலை பற்றியோ, கலரை பற்றியோ பேச எவனுக்கும் வக்கில்லை. நீ யாருடா வெண்ண சொல்றதுக்கு. நீ யாரா வேணாலும் இருந்து விட்டு போ. நான் ஒரு படம் எடுத்திருக்கேன் விசித்திரன்னு. அதை பார்த்து விட்டு நீ கிழி. அந்த படம் சரியில்லை என்றால் நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன்.

இது வைரலாகும்ன்னு தெரியும்
எனக்கு சினிமாவின் வலி தெரியும். சினிமாவை விட்டு போக மாட்டேன். எனக்கு மக்கள் சப்போர்ட் இருக்கு. யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள். சினிமா பாவம். நான் துணைதலைவராக இருப்பதால் சொல்கிறேன். வெறும் நடிகராக இருந்தால் இந்த டைரக்டர் சான்ஸ் கொடுக்க மாட்டார், அந்த தயாரிப்பாளர் சான்ஸ் கொடுக்க மாட்டார் என பயந்திருப்பேன். நானே படம் எடுப்பேன். நானே தான் நடிப்பேன். நானே வெளியிடுவேன் ஸ்டூடியோ 9 மூலம். அதை பார்த்து விட்டு மக்கள் சொல்லட்டும். இது எந்த அளவிற்கு வைரலாகும் என தெரியும். வைரலாகியாவது இந்த படம் வெளியே தெரிந்து வெற்றி அடையட்டும் என்றார்.

விடாமல் ட்ரோல் செய்யும் ப்ளூ சட்டை மாறன்
அஜித் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசியதை கண்டித்த நடிகர் ஆரியை ட்ரோல் செய்து ட்வீட் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது ஆர்.கே.சுரேசையும் ட்ரோல் செய்து ட்வீட் போட்டு வருகிறார். ஆர்.கே.சுரேஷ் பேசிய வீடியோ லிங்கை ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், சுரேசை விமர்சித்து சிலர் போட்ட ட்வீட்களையும் ரீட்வீட் செய்து வருகிறார். வெண்ணை கடை சுரேஷ் என குறிப்பிட்டும் கிண்டல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











