»   »  ராணாவின் 'நான் ஆணையிட்டால்' படம் தமிழக அரசியலை பிரதிபலிக்கும் - வீடியோ!

ராணாவின் 'நான் ஆணையிட்டால்' படம் தமிழக அரசியலை பிரதிபலிக்கும் - வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து தமிழில் நான் ஆணையிட்டால் என்று எடுத்துள்ள படம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் தேஜா கூறியுள்ளார்.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் மூலமும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் நடிகர் ராணா. அதனால் இவரது படத்திற்கு தமிழிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Actor Raana daggubathi starrer Naan Anaiyittal film press meet

தற்போது ராணாவை வைத்து தெலுங்கில் எடுக்கப்படும் படங்கள் கூட தமிழுக்கு ஏற்ற அம்சங்களையும் உள்ளடக்கியவாறு தயாராகின்றன. அப்படி தெலுங்கில் 'நேனே ராஜூ நேனே மந்திரி' என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார். இதில் ராணா பக்கா அரசியல்வாதியாக நடித்துள்ளார். தெலுங்கில் இருந்து எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் படத்தின் மசாலா இருக்க வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் மயில்சாமி, சதீஷ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டு படம் மறுபடப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் தேஜா இந்த படத்தில் இருக்கும் வசனங்கள் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கும். ஹீரோ ராணாவை பார்த்து நான் சி.எம் என்பதை மறந்துவிடாதே என்கிறது முதல்வர் கேரக்டர் சொல்ல, அதற்கு ராணா நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா" என கடந்த சில மாதங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்த அரசியல் கூத்தை விமர்சித்துள்ளோம்.

இந்த காட்சிகளையும் வசனங்களையும் கடந்த வருடமே படமக்கிவிட்டேன். ஆனால் அந்த நிகழ்வுகள் தற்போது உண்மையாகவே நடந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

English summary
Raana Daggubathi acting as a politician in NAAN ANAIYITTAL is predicting the Koovathur resort politics, says Director Teja at a press meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil