»   »  'ரஜினி இமயமலைக்கு போனதே இதுக்குத்தான்' - பிரபல நடிகர் கிண்டல்

'ரஜினி இமயமலைக்கு போனதே இதுக்குத்தான்' - பிரபல நடிகர் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் நேரடி அரசியலில் இறங்கிவிட்டார். அவரது அரசியல் பிரவேசத்துக்கான வேலைகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து பொது விழாக்களிலும் கலந்துகொண்டு பேசிவருகிறார் ரஜினி.

சமூகத்தில், சுற்றி நடக்கும் விஷயங்களைக் கண்டு அவரே அமைதியாக இருந்தாலும், அவரை எப்படியாவது பேசவைத்து சர்ச்சையை கிளப்பிவிடுகிறார்கள். அரசியல் பேச்சுகளுக்கு மத்தியில் சமீபத்தில் அவர் இமயமலை சென்றுவந்தார்.

actor Radharavi trolls rajinikanth

இமயமலையில் ஆன்மீக பயணத்தை நன்றாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டார் ரஜினி. அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அவரை கிண்டலடித்தும் பல மீம்ஸ் உருவாக்கப்பட்டன.

ரஜினிகாந்த் அடுத்து அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்நிலையில் நடிகரும் அரசியல் பிரமுகருமான ராதாரவி, ரஜினி இமயமலைக்குச் சென்றதையும், அவரது அரசியல் மூவ்களையும் விமர்சித்துள்ளார்.

"ரஜினி இமயமலைக்கு சென்றதே அவரது கட்சிக் கொடியின் நிறத்திற்கு அனுமதி வாங்கத்தான். தமிழ்நாட்டில் புதிதாக கட்சிக்கொடி உருவாக்க இப்போது கலரே கிடையாது" என கிண்டலாக பேசியுள்ளார் ராதாரவி.

English summary
Rajinikanth's political entry work is underway. Rajini completed his spiritual journey and came back to Chennai. Actor Radharavi said, "Rajini went to the Himalayas to getting approval for color of the flag".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X