சூப்பர்ஸ்டாரிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்.. எதுக்காக தெரியுமா?

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி 2 படம் உருவாகவுள்ளது.

விரைவில் சூட்டிங் துவங்கவுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, லஷ்மி மேனன் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர்ஸ்டார் நடித்த ரோலில், சந்திரமுகி 2 படத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். பி வாசு இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

சந்திரமுகி படம்

சந்திரமுகி படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படத்தில் வடிவேலு காமெடி மிகவும் சிறப்பாக அமைந்தது. மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு என்ற டயலாக் தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்து வருகிறது.

 ரஜினியின் கேரியர் பெஸ்ட் படம்

ரஜினியின் கேரியர் பெஸ்ட் படம்

பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் ரீமேக் என்று கூறப்பட்டாலும் படம் சிறப்பான தமிழ் படமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றி மற்றும் வசூல் தமிழ் திரைப்பட உலகில் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் இந்தப் படத்திற்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.

மிரட்டலான ஜோதிகா நடிப்பு

மிரட்டலான ஜோதிகா நடிப்பு

குறிப்பாக இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பாக பேசப்பட்டன. ஜோதிகாவின் நடிப்பு மிரட்டியது. கங்கா என்ற கதாபாத்திரத்தில், சாதாரண குடுமபப் பெண்ணாகவும், மிரட்டலான சந்திரமுகியாகவும் மாறி மாறி அவர் பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார். முன்னதாக இந்த ரோலில் நடிக்க சிம்ரனுக்கு தான் வாய்ப்பு இருந்ததாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நடிக்க முடியாத நிலையில் ஜோதிகாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை பி வாசு இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாயகிகளாக த்ரிஷா மற்றும் லஷ்மி மேனன் இருவரும் சாய்சில் உள்ளனர்.

ரஜினியிடம் லாரன்ஸ் ஆசி

ரஜினியிடம் லாரன்ஸ் ஆசி

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து சந்திரமுகி 2 படத்திற்காக அவரது ஆசிகளை பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியின் கால்களில் விழுந்து அவர் ஆசி பெற்றுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

Recommended Video

Lawrence படத்தில் Trisha-வை தொடர்ந்து list-ல் சேர்ந்த Lakshmi Menon Kollywood | Filmibeat Tamil
மைசூருவில் சூட்டிங் துவக்கம்

மைசூருவில் சூட்டிங் துவக்கம்

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் மைசூரில் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை முதல் பாகத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் பாகத்தில் ரஜினியின் நடிப்பு, காமெடி, ஆக்ஷன் சிறப்பாக அமைந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை ராகவா லாரன்ஸ் திருப்தி படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X