twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்!

    |

    சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தமிழ்த்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய லாரன்ஸ், அரசியல் பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

    வறுத்தெடுத்த ரசிகர்கள்

    அப்போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணியடித்ததாக அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. லாரன்ஸின் இந்த பேச்சால் கடுப்பான கமல் ரசிகர்கள், அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

    கமல் ஆதரவாளர்கள்

    இதனை தொடர்ந்து தான் பேசியது திரித்துக் கூறப்பட்டதாக விளக்கமளித்தார் லாரன்ஸ். ஆனாலும் அவரை உண்டு இல்லை என செய்தனர் கமலின் ஆதரவாளர்கள்.

    ஃபேஸ்புக்கில் விளக்கம்

    ஃபேஸ்புக்கில் விளக்கம்

    இந்நிலையில் கமலை நேரில் சந்தித்து தான் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

    நன்றியும் அன்பும்

    நன்றியும் அன்பும்

    எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.. என பதிவிட்டுள்ளார்.

    போட்டோ

    போட்டோ

    கமலை பூச்செண்டு கொடுத்து சந்தித்த லாரன்ஸ் அவருடன் எடுத்த போட்டோக்களையும் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் கமல் லாரன்ஸ் தோளில் கையை போட்டு மிக நெருக்கமாக சிரித்தப்படியே போஸ் கொடுத்திருக்கிறார்.

    English summary
    Actor Raghava lawrence meets Kamal hassan. Lawrence said in Darbar function that He hits cow dung on Kamal poster in his childhoods. His speech became controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X