பொன்னியின் செல்வனுக்காக ரயிலில் பயணித்த மணிரத்னம்...செல்ஃபியை பகிர்ந்த ரகுமான்

சென்னை : மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வனின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 பாகங்களான வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ஒரே சமயத்தில் 2 பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பாகங்களும் நிறைவடையும் நிலையில் உள்ளதாம். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை டப் செய்து வெளியிடுவதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் ஜெயம் ரவியும், விக்ரமும் ஏற்கனவே தங்களின் போஷனை முடித்து விட்டதாக ஹாட் அப்டேட் கொடுத்து விட்டனர். அதிலும் பொன்னியின் செல்வன் கேரக்டரில் ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரமும், வந்திய தேவன் ரோலில் கார்த்தியும் நடிப்பது உறுதியாகி உள்ளது.

 actor rahman shared a selfie with maniratnam in their train journey for ponniyin selvan

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை முடித்து விட்டதாக மிக உருக்கமான பதிவுடன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்திற்காகவும் தயாராகி வருகிறார் ரவி.

இந்நிலையில் பிரபல நடிகர் ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த செல்ஃபி ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன், குவாலியரில் இருந்து இந்தூருக்கு ரயிலில் செல்கிறோம். கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்கிறேன்.

பழைய நினைவுகள் திரும்ப வருகின்றன. எனது வேடிக்கையான குட்டி கதைகளை மணிரத்னம் மற்றும் ரவிவர்மனுடன் பகிர்ந்து கொண்டேன். இரண்டிற்கும் இடையில் உள்ள மகேஷ்வருக்கு செல்கிறோம். அங்கிருந்து 2 மணி நேரம் சாலை வழியாக செல்ல வேண்டும் பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கிற்காக என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் மதுராந்தகன் ரோலில் தான் ரகுமான் நடிக்கிறாராம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X