twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலம் யாரை எப்போ மேல தூக்கிவிடும், கீழே இறக்கி விடும்னு தெரியாது.. ரஜினி பேச்சு

    |

    சென்னை : நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் தன்னுடைய உடல்நலனில் சிறப்பான அக்கறை செலுத்தி பிட்டாக வைத்துள்ளார்.

    தன்னுடைய உடல்நலன் சிறப்பாக அமைய தன்னுடைய மனைவி லதாதான் காரணம் என்று அவர் தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    தற்போது பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தன்னுடைய ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

    முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி

    நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கிய தன்னுடைய திரைப்பயணத்தை தற்போது ஜெயிலர் படத்தில் தொடர்ந்து வருகிறார். அவரது 169வது படமாக ஜெயிலர் படம் அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்காக கதை கேட்டு வருகிறார். தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனம் கொண்டவராகவும் ரஜினி காணப்படுகிறார்.

    ஒய்ஜி மகேந்திரன் நாடகம்

    ஒய்ஜி மகேந்திரன் நாடகம்

    சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்வையிட்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அந்த நாடகம் விரைவில் படமாக்கப்பட உள்ளது குறித்தும் அவர் பேசினார். 47 ஆண்டுகளுக்கு முன்பு ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க தான் சென்றதாகவும் அரைமணிநேரம் காத்திருந்தும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

    சாருகேசி நாடகம்

    சாருகேசி நாடகம்

    ஆனால் தற்போது சாருகேசி நாடகத்திற்கு தலைமை விருந்தினராக வந்துள்ளதாகவும் இது தான் காலத்தின் விளையாட்டு என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காலம் ஒருவரை எங்கிருந்து எங்கே மேலே கொண்டு செல்லும் என்பதை சொல்ல முடியாது என்றும் எப்ப கீழே இறக்கும்னும் சொல்ல முடியாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    கெட்ட பழக்கங்கள்

    கெட்ட பழக்கங்கள்

    தான் நடத்துனராக இருந்தபோது தினமும் மது குடிப்பேன், மாமிசம் சாப்பிடுவேன் மற்றும் அதிகமான அளவில் சிகரெட் பிடிப்பேன் என்று தெரிவித்த ரஜினிகாந்த், மாமிசம் சாப்பிடாதவர்களை பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மூன்று விஷயங்களையும் ஒருசேர செய்பவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ முடியாது என்றும் ரஜினி கூறியுள்ளார்.

    அன்பால் மாற்றிய லதா

    அன்பால் மாற்றிய லதா

    ஆனால் தற்போது தான் 73 வயதை கடந்துள்ளதாகவும் அன்பால் தன்னுடைய மனைவி லதா தன்னை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு லதாவை அறிமுகம் செய்து வைத்தவர் ஒய்ஜி மகேந்திரன்தான் என்றும் அதற்கு தான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் மேலும் கூறினார்.

    English summary
    Actor Rajinikanth shared his cinema career in YG Magendran's drama
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X