முடிந்தது மருத்துவ பரிசோதனை.. நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

வெளியான வீடியோக்கள்

வெளியான வீடியோக்கள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டது முதல் தோஹாக விமான நிலையம் சென்றது வரை ஏராளமான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது.

வழக்கமான பரிசோதனை

வழக்கமான பரிசோதனை

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்தையடுத்து, மயோ க்ளினிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார்.

தனி விமானம் மூலம்

தனி விமானம் மூலம்

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.

Recommended Video

Rajinikanth Biography | ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு | Rajinikanth Age, Movies, Awards, Net Worth
நாளை திரும்புகிறார்

நாளை திரும்புகிறார்

தற்போது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

ரசிகர்கள் தயார்..

ரசிகர்கள் தயார்..

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். மருத்துவ பரிசோதனையை முடித்த கையோடு தான் நலமுடன் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கவிஞர் வைரமுத்துவுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X