சிங்கம் ஒன்று புறப்பட்டதே... ஸ்டைலா கெத்தா வாக்கிங் போன ரஜினிகாந்த்: ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது.
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினி.
ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோக்கள், வீடியோக்கள் லீக்கான நிலையில், தற்போது ரஜினியின் வீடியோ ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜெயிலராக மாறிய தலைவர்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த படம் வெளியானது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியது. தலைவருக்கான எந்த மாஸ் கன்டென்ட்டும் இல்லையென கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. இதனால், அடுத்து உடனே ஒரு படம் பண்ண நினைத்த ரஜினி, தற்போது நெல்சனுடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார்.

ரெட்ரோ லுக்கில் சூப்பர் ஸ்டார்
கோலமாவு கோகிலா, டாக்டர் என நெல்சன் ஹிட் கொடுத்ததை நம்பி அவருடன் கூட்டணி வைத்தார் ரஜினி. ஆனால், இந்தக் கூட்டணி முடிவான பின்னர் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஒரேடியாக படுத்தேவிட்டது. இதனால் நெல்சனுடன் முடிவான கூட்டணி ப்ரேக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டைட்டிலையும் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். ரெட்ரோ லுக்கில் 80ஸ் தோற்றத்தில் வெளியான ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம்ம வைரலானது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான போட்டோஸ்
இதனையடுத்து, ஜெயிலர் ஷூட்டிங்கும் உடனடியாக தொடங்கப்பட்டது. ரஜினியுடன் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, ரஜினியின் புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இதனால், ரஜினியின் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதுகுறித்து, நெல்சன் உட்பட ஜெயிலர் படக்குழுவினரும் செம்ம கடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், புகைப்படங்களை வெளியிடுபவர்கள் யார் என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடுத்தடுத்து போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இது ஜெயிலர் படத்தில் இருந்து வெளியாகவில்லை என்பதால், ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி தனது வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் வாக்கிங் செய்யும் வீடியோவாக இது இருக்கும் சொல்லப்படுகிறது. "தலைவா சிங்கம் நடந்த மாதிரி இருக்கு" என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ரசிகர்கள் கூறி வருவதைப் போல, அந்த வீடியோவில் ரஜினியின் நடை செம்ம ஸ்டைலாகவும் கெத்தாகவும் மாஸ் காட்டி வருகிறது.

அப்பவும் இப்பவும் அதே வேகம்
அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த வேக நடையை பார்த்த ரசிகர்கள், "தலைவர் எப்பவுமே ஸ்பீடு தான். அவர் சாதாரணமாக நடத்தாலே மத்தவங்க பக்கத்துல போக முடியாது, அவரோட வேகத்துக்கு டஃப் கொடுக்க முடியாம ஓடிதான் போகணும். அதனால தான் அவர் இன்னும் சூப்பர் ஸ்டார்" என பலவிதமாக புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பொது இடங்களில் சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு மத்தியில், ரஜினிகாந்த் தெருவில் இறங்கி ராஜநடை போட்டது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











