»   »  வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் பிறந்ததும் பிறந்தது முதல் தேதியிலேயே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் கனெக்டிவிட்டி இல்லாததால் அங்கு சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய மூத்த நடிகை லட்சுமியும் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷத்தின் வீட்டில் 11 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்ததால் அவர் அகதி போன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

English summary
Security personnel have rescued actor Rajkiran who got stuck in the flood in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil