Just In
- 17 min ago
'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்!
- 51 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 11 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 12 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
Don't Miss!
- News
பெங்களூர், ஒசூர் நகரங்களில் கடும் பனிப்பொழிவு.. காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
மும்பை : தென்னிந்திய திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வருகிறார்.
அடுத்தடுத்து இரண்டு ஹிந்தி திரைப்படங்களில் ஒப்பந்தமாகி திரையுலகினரை அதிர வைத்த ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது கனவு கார் ஒன்றை வாங்கி அந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் இப்பொழுது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் டாப் டக்கர் ஆல்பம் கலர்ஃபுல்லான போஸ்டர் இப்பொழுது வெளியாகி உள்ளது.

தமிழுக்கு அறிமுகமாக
கைதி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்துவரும் சுல்தான் திரைப்படம் நடித்த திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது என சொல்லப்படும் நிலையில் இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமாக உள்ளார்.

பாலிவுட்டிலும் அடியெடுத்து
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்களில் விஜய்தேவரகொண்டா உடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து தனது க்யூட்டான நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ரஷ்மிகா மந்தனா வுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வர பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார்.

மிஷன் மஞ்சு
அறிமுகமான குறுகிய காலத்திலேயே இப்போது உயரிய இடத்தை எட்டியுள்ள ரஷ்மிகா மந்தனாவுக்கு முன்னணி நடிகைகளுக்கு இணையாக பல கோடி ரூபாய் சம்பளம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது ஹிந்தியில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாகி வரும் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் சித்தார்த் மல்கோத்ராக்கு ஜோடியாக நடித்து ஹிந்தியில் தனது அறிமுகத்தை கொடுக்கவுள்ளார்.

இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான yrf தயாரிக்கும் புதிய பேப்பே ஆல்பமுக்கு இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, உச்சன அமித் பாட்சா ஆகியோரின் இசையில் அம்மா செல்லம்மா பாடலை பாடிய ஜொனிதா காந்தி குரலில் உருவாகியிருக்கும் "டாப் டக்கர்" ஆல்பம் பாடலில் ரஷ்மிகா மந்தனா நடித்து புது அவதாரத்தை எடுத்திருக்கும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. விரைவில் பாடல் வெளியாக உள்ள நிலையில் இதனை இயக்குனர் அமர்ப்ரீத் ஜிஎஸ் சாப்ரா இயக்கி வருகிறார்.