»   »  பாலியல் புகார் கூறிய நடிகை மீது ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு போட்ட நடிகர்

பாலியல் புகார் கூறிய நடிகை மீது ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு போட்ட நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த நடிகை மீது கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் வி. ரவிச்சந்திரன். அவரை கிரேஸி ஸ்டார் என்று அழைப்பார்கள். அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.


அந்த நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது,


பிந்தியா

பிந்தியா

ஹல்லிமேஸ்த்ரு படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் பிந்தியா. அவர் படப்பிடிப்பின்போது நான் அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக பேட்டி அளித்தார். இந்த பொய் குற்றச்சாட்டை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.


வழக்கு

வழக்கு

உண்மையை உலகிற்கு தெரிவிக்க நான் பிந்தியா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன். ஒரு ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தேன். பணத்திற்காக அல்ல உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தவே வழக்கு தொடர்ந்தேன்.


உண்மை

உண்மை

நான் அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் அனைவர் முன்பும் உண்மையை தெரிவித்தார் பிந்தியா. அதன் பிறகே எனக்கு நிம்மதியாக இருந்தது.


பாடம்

பாடம்

எந்த தவறும் செய்யாமல் நான் நீதிமன்றம் சென்றேன். பிந்தியாவுக்கு பாடம் கற்பிக்கவே வழக்கு தொடர்ந்து அவர் வாயாலேயே உண்மையை உலகிற்கு சொல்ல வைத்தேன் என்றார் ரவிச்சந்திரன்.


English summary
Kannada actor V. Ravichandran filed a defamation case of One Rupee on the actress Bindiya who falsely accused him of trying to rape her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil