Don't Miss!
- Technology
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- Finance
அடிமடியில் கைவைத்த கூகுள்.. இனி கிரீன் கார்டு வாங்குவது ரொம்ப கஷ்டம்.. அழுது புலம்பும் ஊழியர்கள்..!
- News
ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர்
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு சீனியர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
வெளிநாட்டில் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்... ஆர்.ஜே.பாலாஜிக்கு இவ்ளோ பெரிய மகன்களா?
சென்னை : நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபரலமானவர் ஆர்.ஜே.பாலாஜி.
பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள பாலாஜி, எல்.கே.ஜி, படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
சினிமாவில் என் முதல் நண்பர் சிம்புதான்... ஆர்.ஜே.பாலாஜி சுவாரசிய தகவல்

ஆர்ஜே பாலாஜி
சரவெடிப்போல பரபரப்பான பேச்சம்,டைமிங் சென்ஸ் காமெடியும் ஆர்ஜே பாலாஜிக்கு கைவந்த கலை. ரேடியோ நிறுவனத்தில் ஆர்ஜே வாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி சுந்தர் சி இயக்கத்தில் உருவான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்தின் நண்பனாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியின் காமெடி அனைவருக்கும் பிடித்துப்போனது.

நகைச்சுவையில் கலக்கினார்
அந்த படத்தைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில், விஜய்சேதுபதியுடன் இணைந்து காமெடியில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். காமெடியாக நடித்துக்கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தைக் கொடுத்த எல்கேஜி திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. பாக்ஸ் ஆபீசிலும் இப்படம் ஹிட்டடித்தது.

இயக்குநர் அவதாரம்
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். கடவுளை மட்டும் நம்புங்கள் மூட நம்பிக்கைகளை நம்பாதீங்க என்ற கருத்துடன் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதையடுத்து, இந்தி படமான பதாய் ஹோ படத்தை தமிழில் வீட்டு விசேஷங்க என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். இந்த படத்தையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

குடும்ப புகைப்படம்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜிக்கு, தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதற்கு கேப்ஷனாக Family First.... Second...Third...Fourth... Fifth... That was an amazing trip...Now its time to RunBabyRun என பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.