Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வேணாம்..விட்டுடு.. ப்ளூ சட்டை மாறனை வெச்சி செஞ்ச ஆர்.ஜே.பாலாஜி!
சென்னை : வீட்ல விசேஷம் திரைப்படத்தை கண்டபடி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
Recommended Video
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது இயக்குநராகவும் மாறினார் ஆர் ஜே பாலாஜி.
வாரிசு
செகண்ட்
லுக்கும்
காப்பியா...ரஜினி
படங்களை
காப்பி
அடிக்கிறாரா
விஜய்?

மூக்குத்தி அம்மன்
நயன்தாரா அம்மன் வேடத்தில் நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது. அது மட்டும் இல்லாமல், நீண்டநாட்களுக்கு பிறகு சாமி படம் வெளியானதால் மக்கள் படத்தை ரசித்துப் பார்த்தனர்.

வீட்டில் விசேஷம்
ஆர்ஜே பாலாஜி தற்போது வீட்டில் விசேஷம் எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பதாயி ஹோ படத்தின் தமிழ் ரீமேக்தான் வீட்டில் விசேஷம். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்தது மட்டுமல்லாமல் சரவணன் என்பவருடன் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

வித்தியாசமான கதை
போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்தியராஜ் போன்றோரும் நடித்திருக்கின்றனர். 50 வயதில் தனது அம்மா கர்ப்பமாகிறாள் இந்த செய்தியை குடும்பத்தில் உள்ளவர்களும் அக்கம்பக்கத்தினரும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை தமிழ் ஆடியன்சுக்கு ஏற்ப நகைச்சுவையுடன் கூறி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. நடிப்புக்கு பெயர்போன ஊர்வசி இந்த படத்தில் அம்மாவாக வாழ்ந்து இருக்கின்றார். மேலும் சத்யராஜ் இந்த படத்தில் வழக்கம்போல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தை கண்டபடி விமர்சித்துள்ளார். இதனால், கடுப்பான ஆர்.ஜே பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பு பற்றி சிறப்பாக பேசியிருந்தனர்.
|
வேணாம்..விட்டுடு..
இதையடுத்து,பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ப்ளூ சட்டை மாறனைப்போல மிமிக்ரி செய்து, யாருக்காக படம் எடுத்தோமோ அவங்களுக்கு புடிச்சிருந்தா போதும், சோ.. பச்சை சட்டை உனக்கு இந்த படம் பிடித்திருந்தால் போதும், எந்த நீல சட்டைக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று ஆர்.ஜே.பாலாஜி அவருக்கே உரிய குசும்புடன் ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேணாம்..விட்டுடு.. அழுதுடுவேன் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.