»   »  நல்ல வேளை டிகாப்ரியோ, விஜய் டிவிகிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க - ஆர் ஜே பாலாஜி

நல்ல வேளை டிகாப்ரியோ, விஜய் டிவிகிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க - ஆர் ஜே பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஒருவழியாக இன்று வாங்கியே விட்டார்.

இதற்காக பலரின் பாராட்டு மழையிலும் அவர் நனைந்து கொண்டிருக்க, அவரை சற்று வித்தியாசமாக வாழ்த்தியிருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்ஜே பாலாஜி "வாழ்த்துக்கள் டைட்டானிக் ஜாக். நல்ல வேளையாக நீங்கள் இந்த விருதை வென்று விஜய் டிவியின் சிறப்பு விருந்தினராக, இந்த வருட விருது விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பித்து விட்டீர்கள்".

என்று படு நக்கலாக வாழ்த்தியிருக்கிறார். இதனை விஜய் டிவி எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

எனினும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் பலரும் ரசித்து, பதிலுக்கு தங்களின் கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு வருகின்றனர்.

English summary
R.J.Balaji Tweeted "Congratulations Titanic Jack..! Nalla vela u won n saved urself frm being d chief guest of Vijay Awards this year ..! #LeonardoDiCaprio".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil