Robo Shankar: திடீரென எடுத்த ரத்த வாந்தி.. ரோபோ சங்கர் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
சென்னை: நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருந்தார் ரோபோ சங்கர். உடல்நல குறைவால் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலைகள் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ரோபோ சங்கர், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் மாரி, விஷ்ணு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தனியார் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார். பெரிய திரை, சின்னத்திரை என பிஸியாக இருந்த சமயத்தில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு அவர் மஞ்சகாமாலை நோய்யால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார்.

ரோபோ சங்கர்: அதன்பின் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் காரணமாக மஞ்ச காமாலையிலிருந்து மீண்ட ரோபோ சங்கர், தனது மகள் இந்திரஜாவிற்கு சிறப்பாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் அம்பானி வீட்டு திருமணம் போல நடந்தது என அனைவரும் சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடந்தது. மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ரத்த வாந்தி எடுத்தார்: இந்த நிலையில் 'காட்ஸ்ஜில்லா' படத்தின் பூஜையில் ரோபோ சங்கர் கலந்து கொண்விட்டு, துரைப்பாக்கம் அருகே நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு நடித்து வந்தார். அப்போது, திடீரென ரோபோ சங்கர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த ஜெம் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணி அளவில் உயிரிழந்தார். ரோபோ சங்கர் மருத்துவமனைக்கு வரும் போதே, கடுமையான குடலிறக்க இரத்தப்போக்கு மற்றும் பல உறுப்பு செயலிழப்புடன் மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரோபோ ஷங்கருக்கு உடல்நிலை குன்றியதற்கு காரணமே அவர் மது பழக்கத்திற்கு ஆளானதுதான் என்று சொல்லப்படுகிறது. முதல்முறை உடல்நலம் குன்றியபோதே மது பழக்கத்தை கைவிட்டு அதிலிருந்து மீண்டு குடிக்க தொடங்கியது தான் இந்த துயரமான சம்பவத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











