twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓசியில படத்தை பார்த்துட்டு விமர்சிக்காதீங்க.. என்ன இப்படி சொல்லிட்டாரு பீச்சாங்கை ஹீரோ!

    |

    சென்னை: பீச்சாங்கை படத்தில் நடித்த ஹீரோ ஆர்.எஸ். கார்த்திக் விமர்சகர்களை கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் விமர்சகர்கள் சொந்த காசு கொடுத்து படத்தை பார்த்து விட்டு விமர்சியுங்க என பேசியிருப்பது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பல யூடியூப் விமர்சகர்கள் ஆர்.எஸ். கார்த்திக்கை விளாசித் தள்ளி வருகின்றனர்.

    “Mirror mirror on the wall“பிரியங்கா சோப்ரா வைத்த ட்விஸ்ட்..என்னவா இருக்கும் குழப்பத்தில் ரசிகர்கள்!“Mirror mirror on the wall“பிரியங்கா சோப்ரா வைத்த ட்விஸ்ட்..என்னவா இருக்கும் குழப்பத்தில் ரசிகர்கள்!

    பிரஸ் ஷோ

    பிரஸ் ஷோ

    தங்கள் படத்தை பார்த்து விட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூபர்கள் விமர்சனங்கள் செய்தால், அந்த படம் நல்லா இருக்கும் பட்சத்தில் ரீச் நிறைய கிடைக்கும் என்பதால் தான் சினிமா நடிகர்களுக்கும் பத்திரிகையளர்களுக்கும் பிரஸ் ஷோ மற்றும் ப்ரிவ்யூ ஷோக்களை தயாரிப்பாளர்கள் போட்டு வருகின்றனர். இந்த சிறப்பு காட்சிக்கு கட்டணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விமர்சனத்தால் பாதிப்பா

    விமர்சனத்தால் பாதிப்பா

    தியேட்டரில் பத்து நிமிடம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத படத்தையும் முதல் நாளிலேயே பார்த்து விட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் பெயிட் ரிவ்யூக்களையும், சிலர் நேர்மையான விமர்சனங்களையும், சிலர் நெகட்டிவ் விமர்சனஙக்ளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். இதில், அதிகளவு நெகட்டிவ் விமர்சனங்களால் சினிமா பாதிப்பதாக ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    காசு கொடுத்து பார்த்துட்டு விமர்சியுங்க

    காசு கொடுத்து பார்த்துட்டு விமர்சியுங்க

    குறும்படங்களில் நடித்து வந்த ஆர்.எஸ். கார்த்திக், இயக்குநர் அசோக் இயக்கத்தில் வெளியான பீச்சாங்கை படத்தின் மூலம் ஹீரோவானார். மீரா மிதுன் நடித்த என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் இவர் தான் ஹீரோ. இந்நிலையில், காசு கொடுத்து படத்தை பார்த்துட்டு விமர்சியுங்க என அவர் சினிமா விழாவில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    படத்தை நல்லா எடுக்கலாமே

    படத்தை நல்லா எடுக்கலாமே

    நல்ல படங்களை விமர்சகர்கள் தொடர்ந்து பாராட்டி பல ரசிகர்களை தியேட்டருக்கு வர வழைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். படம் சரியாக இல்லையென்றால் நல்லா இல்லை என்கிற விமர்சனம் தான் வரும். விமர்சகர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் படத்தை நல்லா எடுக்கலாமே என நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் ஆர்.எஸ். கார்த்திக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    Recommended Video

    Aari slams blue sati maran | மல்லாக்க படுத்து எச்சில் துப்பினா அது நம்ம மேல தான் விழும்
    பிரஸ் ஷோ போடாதீங்க

    பிரஸ் ஷோ போடாதீங்க

    பத்திரிகையாளர்கள் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படங்களை பற்றி எழுதவில்லை என்றால் அவர்கள் வெளியே தெரியவே மாட்டார்கள். முன்னணி நடிகர்களே பத்திரிகை நண்பர்களை பகைத்துக் கொள்ளாத நிலையில், வளரும் நடிகர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், ஃப்ரீயா படத்தை பார்த்துட்டு விமர்சனம் செய்றாங்க என்றால், நீங்க ஏன் பாஸ் பிரஸ் ஷோ போடுறீங்க, உங்க நிகழ்ச்சிகளை கவர் செய்ய பத்திரிகையாளர்களை அழைக்கிறீங்க என்றும் அந்த நடிகரை வச்சு செய்து வருகின்றனர்.

    English summary
    Actor RS Karthik Controversy speech about reviewers shocks Kollywood. He told reviewers buy tickets and watch movies in his latest speech creates trouble to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X