ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது... நடிகர் சவுந்திரராஜன் குடும்பத்துடன் உயிர் தப்பினார்
மதுரை: மதுரை அருகே நடிகர் சவுந்திரராஜன் பயணம் செய்த கார் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் சவுந்திரராஜன் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.
தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சவுந்திரராஜன். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது குடும்பத்தாருடன் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரை அருகே நடிகரின் கார் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்த நடிகர், தனது குடும்பத்தாருடன் காரில் இருந்து வெளியேறினார்.
இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
கார் எதனால் திடீரென தீப்பிடித்தது எனத் தெரியவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications