»   »  என்ன “புதிய” கொடுமை சரவணன்... சந்திரமுகி 2வில் சக்தி?

என்ன “புதிய” கொடுமை சரவணன்... சந்திரமுகி 2வில் சக்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை இயக்க பி.வாசு திட்டமிட்டிருப்பதாகவும், அதில் அவரது மகன் சக்தி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா என நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து பி.வாசு இயக்கிய சந்திரமுகி படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது பி.வாசு கன்னடத்தில் படங்களை இயக்கி வருகிறார்.

திரிஷ்யம் ரீமேக்...

திரிஷ்யம் ரீமேக்...

சமீபத்தில் திரிஷ்யம் படத்தை கன்னடத்தில் இயக்கினார் பி.வாசு. இப்படத்தில் நாயகனாக ரவிச்சந்திரனும், அவருக்கு ஜோடியாக நவ்யாநாயரும் நடித்திருந்தனர்.

சிவலிங்கா...

சிவலிங்கா...

அதனைத் தொடர்ந்து சிவராஜ்குமார், வேதிகா நடித்த ‘சிவலிங்கா' என்ற கன்னட படத்தை அவர் இயக்கினார். இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால், கன்னடத்தில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வருகிறார் பி.வாசு.

சந்திரமுகி -2...

சந்திரமுகி -2...

இந்நிலையில், சிவலிங்கா படத்தை தமிழில் சந்திரமுகி - 2 என்ற பெயரில் ரீமேக் செய்ய வாசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸும், அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

சக்தி...

சக்தி...

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், பி.வாசுவின் மகனான சக்தி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவலிங்கா படத்திலும் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு...

அறிவிப்பு...

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
As reported earlier director P Vasu would apparently be remaking his recent Kannada blockbuster film Shivalinga in Tamil as Chandramukhi 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil