ரஜினி முதல் அமீர் கான் வரை கூலி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு? 404 கோடி வசூல் நஷ்டமா? லாபமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ந் தேதி தியேட்டரில் வெளியானது. இதல், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்(தேவா) தனது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) விசாகப்பட்டினத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினி செல்கிறார். அப்போது, ராஜசேகரின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை தேவாவிற்கு தெரிய வருகிறது. மறுபக்கம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆட்களுடன் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் நாகார்ஜுனா. அவருக்கு வலது கையாக இருக்கிறார் சோபின் சாஹிர். நண்பரின் மரணத்துக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து பழிவாங்க ரஜினி கிளம்ப அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் கூலி படத்தின் கதை.

coolie Rajinikanth Salary
Photo Credit:

குறையும் படத்தின் வசூல்: படத்தின் முதல் பாதி பாட்டு, டான்ஸ் என வேகம் இல்லாமல் சென்றாலும், இரண்டாம் பாதியில், லோகேஷ் உண்மையிலேயே விருந்தை படைத்துவிட்டார் என வழக்கம்போல் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தாலும் பொதுவான சினிமா ரசிகர்களை கூலி திருப்தி படுத்தவில்லை. இந்த படம் அப்படி இப்படி என பில்டப் கொடுத்தாலும்,படம் ஓகே ரகம் தான். லோகேஷின் வழக்கமான ஸ்டைலில் கூலி படம் இல்லை என்று வெளிப்படையாகவே படத்தை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். எது எப்படி இருந்தாலும், படம் வெளியான நான்கு நாட்களில் ரூ 404 கோடியை வசூலித்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. ஆனால், நேற்று வேலை தினம் என்பதால் படத்தின் வசூல் ரூ.9.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதால், படம் ஆயிரம் கோடியை தொடவாய்ப்பே இல்லை.

சம்பள விவரம்: இந்நிலையில், கூலி படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு ரூ.50 சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார். ரஜினிகாந்திற்கு முதலில் ரூ150 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், படம் வெளியாவதற்கு முன் அதிக வசூலை அள்ளியதால், ரூ200 கோடியை கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது அவரை இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெற்ற நடிகராக மாறி இருக்கிறார் ரஜினி.

அதிக சம்பளம் பெற்ற நடிகர்: மேலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவிற்கு ரூ.10 கோடியும், நடிகர் சத்யராஜ், 5 கோடி ரூபாயும், கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசனக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல மோனிகா பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டேவுக்கு மூன்றரை கோடியும், சௌபின் ஷாஹிர் ஒரு கோடியும், அனிருத் ரவிச்சந்தர் ரூ.15 கோடியும், கொடூரமான கேங்ஸ்டர் வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அமீர் கானுக்கு ரூ20 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு அடுத்து வெறும் 15 நிமிட காட்சியில் நடித்த அமீர் கான் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் பெற்ற நடிகராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X