வீட்டு வாடகைக்காக அஜித் பைக்கை விற்றேன்...கண்ணீர் விடும் பிரபல நடிகர்

சென்னை : தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான மனிதர் என்றால் அது தல அஜித் தான். தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிக பாதுகாப்பாக கொண்டு செல்பவர். தன்னை பற்றி விமர்சனங்கள், பாராட்டுக்கள் என எதையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர்.

Actor Sampath rao reveals the story behind that he selling bike used by Thala Ajith

அதே சமயம் தன்னை தேடி வருபவர்களை கணிவுடனும், ஊக்கமளிக்கும் வகையிலும் பேசக் கூடியவர். அதனாலேயே சினிமாவை தாண்டி, பலரின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார் அஜித்.

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது தீனா படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் 2001 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என கூப்பிட துவங்கினர்.

தீனா படத்தில் அஜித்தின் அடியாட்களில் ஒருவராக சம்பத் ராவ் நடித்திருப்பார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தீனா படத்தில் நடித்த பிறகு தான் மக்கள் என்னை அங்கீகரித்தார்கள். அஜித் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.

தீனா படத்தில் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக் என்னுடையது தான். ஆனால் துரதிஷ்டவசமாக அதை விற்க வேண்டியதாகி விட்டது. ஒரு சமயம் மிக கடுமையான பண கஷ்டத்தில் இருந்தேன்.

அந்த சமயத்தில் என்னால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாமல், வாடகை பணத்தை கொடுப்பதற்காக அந்த பைக்கை விற்றேன் என்றார். சம்பத் ராவ், அஜித் நடித்த சிட்டிசன் படத்திலும் நடித்துள்ளார். சூர்யா நடித்த சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் ரவுடி கேரக்டரில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X