"பிகே"ஆமிர் கானை போன்று நிர்வாணமாக நடித்துள்ள பிரபல காமெடி நடிகர்... வைரலாகும் போஸ்டர்!

சென்னை: பிகே படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நிர்வாணமாக நடித்ததை போன்று பிரபல நகைச்சுவை நடிகர் தனது புதிய படத்தில் ஆடையில்லாமல் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சம்பூர்ணஷே பாபு. 2009ஆம் ஆண்டு வெளியான மகாத்மா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சம்பூர்னேஷ் பாபு.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு வெளியான ஹிருதய காலேயம் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். காமெடி படங்களில் நடித்து வரும் சம்பூர்னேஷ் பாபு பல படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை படம்

நகைச்சுவை படம்

இவர் நடிப்பில் வெளியான சிங்கம் 123 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் சீரிஸ் படங்களை மைய்யப்படுத்தி நகைச்சுவை படமாக இப்படம் உருவாக்கப்பட்டது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது.

மூன்று கதாப்பாத்திரங்கள்

மூன்று கதாப்பாத்திரங்கள்

கடைசியாக கோப்பரி மட்டா என்ற படத்தில் நடித்திருந்தார் சம்பூர்னேஷ். இந்தப் படத்தில் சம்பூர்னேஷ் மூன்று தலைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் மூன்று கதாப்பாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது டக்காரி தொங்கா சக்கனி சுக்கா, ராதா கிருஷ்ணா, பஸார் ரவுடி, காலிஃபிளவர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நிர்வாண கோலத்தில்

நிர்வாண கோலத்தில்

நடிகர் சம்பூர்னேஷ் பாபு, நடிப்பில் உருவாகியுள்ள காலிஃபிளவர் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் காலிஃபிளவர் படம் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காலிஃபிளவர் படத்தில் நடிகர் சம்பூர்னேஷ் நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார். ஒரு காலிஃபிளவரை மட்டும் வைத்து மறைத்துள்ளார்.

ஆமிர் கானின் பிகே படம்

ஆமிர் கானின் பிகே படம்

எண்டெர்டெய்ன்மென்டுக்கு தேவை என்றால் எப்படிப்பட்ட காட்சியிலும் நடிக்க தயங்க மாட்டார் சம்பூர்னேஷ். அந்த வகையில் படத்தின் கதையை இயக்குநர் விளக்கியதுமே டக்கேன ஓகே சொல்லிவிட்டாராம் நடிகர் சம்பூர்னேஷ் பாபு. பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பிகே படத்தில் ஆடையில்லாமல் நடித்தார்.

காலிஃபிளவரை வைத்து மறைத்து

காலிஃபிளவரை வைத்து மறைத்து

அவர் ரேடியோவை வைத்து மறைத்து கொள்வார். அதுபோல் சம்பூர்னேஷ் காலிஃபிளவரை வைத்து மறைத்துள்ளார். சம்பூர்னேஷ் காலிஃபிளவரை வைத்து மறைத்திருக்கும் காட்சியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் போஸ்டரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X