»   »  ரஜினி, கமல் படங்களில் நடித்த சாமிக்கண்ணு மரணம்: திரையுலகினர் இரங்கல்

ரஜினி, கமல் படங்களில் நடித்த சாமிக்கண்ணு மரணம்: திரையுலகினர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள சாமிக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

8 வயதில் இருந்து நாடகங்களில் நடித்து வந்தவர் சாமிக்கண்ணு. 1954ம் ஆண்டு வெளியான புதுயுகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Actor Samykannu no more

அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, போக்கிரி ராஜா, சகலகலா வல்லவன், என் ராசாவின் மனசிலே உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 95 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சாமிக்கண்ணுவின் மரணத்திற்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Samykannu who has acted in more than 400 films passed away at the age of 95 in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil