கொரோனாவில் இருந்து குணமான சரத்குமார்.. காஞ்சி காமாட்சியம்மன் கோவில் தம்பதி சகிதமாக தரிசனம்!
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமானதை தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Recommended Video

நடிகர் சரத்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி சரத்குமார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

10 நாட்களுக்கு தனிமை
இதனை அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி அறிக்கையாக வெளியிட்டு அறிவித்தார். இருப்பினும், 10 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்த அவர், மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார்.

மாலையும் கழுத்துமாக..
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ராதிகா
கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி இருவரும் மாஸ்க் அணிந்து வழிபாடு செய்கின்றனர். மேலும் இதுகுறித்து நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் வழிபாடு செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஆத்மாக்களுக்கு நன்றி
அதில் காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் பெற கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











