லாரன்ஸுக்கு வில்லனாகும் சரத்குமார்.. ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

சென்னை: நடிகர் சரத்குமார் லாரன்ஸ் படத்தில் வில்லனாக கமிட்டாகியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் கோலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான காஞ்சனா சீரிஸ் படங்களில் பெரும் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து இந்தியில் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை ரீமேக் செய்தார் லாரன்ஸ்.

சரத்குமார் படம்

சரத்குமார் படம்

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக உள்ளார் லாரன்ஸ். தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ருத்ரன் படத்தில் நடிகர் சரத்குமாரும் இணைந்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஸ்பெஷல் போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது.

நெகட்டிவ் ரோலில்தான்

நெகட்டிவ் ரோலில்தான்

மேலும் சரத்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த காலத்தில் நடிகர் சரத்குமார் மிரட்டல் வில்லனாக நெகட்டிவ் ரோலில்தான் அதிகம் நடித்திருந்தார்.

வெயிட்டான கேரக்டர்

வெயிட்டான கேரக்டர்

இந்நிலையில் லாரன்ஸின் ருத்ரன் படத்தில் சரத்குமாருக்கு வெயிட்டான கேரக்டர்தான் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை கதிரேசன் இயக்கி தயாரிக்கிறார்.

ஹாரர் படமா?

ஹாரர் படமா?

ருத்ரன் படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படமும் காஞ்சனா சீரிஸ் படங்களை போன்று ஹாரர் படம்தானா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X