Don't Miss!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சரவணனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்.. என்ன சித்தப்பு கலக்குறீங்க!
சென்னை : நடிகர் சரவணன் சில நாட்களுக்கு முன்பு பிளாக் கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்தவாறு வெளியிட்டிருந்த போட்டோஷுட் புகைப்படங்கள் மிகப்பெரிய வைரல் ஆகின. இந்நிலையில் மீண்டும் மற்றும் ஒரு கலக்கலான போட்டோ ஷூட்டிங் எடுத்து அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் செம வைரலாகி வருகிறது
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போயுள்ள நிலையில் நடன இயக்குனர் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு மாஸ் சித்தப்பு என ஆரவாரமாக புகழ்ந்து தள்ளி வருகிறார்.
பிரபல நடிகைக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு.. டாக்டர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை சிகிச்சை!

முன்னணி நடிகராக
1980 மற்றும் 90களில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்த நடிகர் சரவணன் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

வெற்றி கதாநாயகனாக
பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு, சூரியன் சந்திரன் என பல பேக் டு பேக் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த சரவணன் பல கோடி ரசிகர்களின் துணையால் வெற்றி கதாநாயகனாக வெற்றி நடை போட்டார்.

அசத்தலான கம்பேக்
இந்நிலையில் ஒரு சில படங்களை தயாரித்தும் இயக்கியும் இருந்த சரவணனுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட சிறுது காலம் திரைத்துறையை விட்டு தள்ளியே இருந்த இவர் மீண்டும்" பருத்தி வீரன்" திரைப்படத்தின் மூலம் அசத்தலான கம்பேக் கொடுத்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

கிடைக்கின்ற வாய்ப்பை
இவ்வாறு தமிழ் சினிமாவிற்கு பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த சரவணனுக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்த நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்
பல ஆண்டுகளாக இவரை திரையில் காண ரசிகர்கள் ஓரிரு திரைப்படங்களில் மீண்டும் பார்க்க, சரவணன் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களை குஷி படுத்திய தோடு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின் வெளியேற்றப்பட்டார்.

ஆயிரம் பொற்காசுகள்
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடிய சரவணன் சமீபத்தில் அதர்வா நடித்த "100" திரைப்படத்தில் நடித்து இருந்த நிலையில் இப்பொழுது விதார்த் கதாநாயகனாக நடித்து வரும் "ஆயிரம் பொற்காசுகள்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரஷ்ஷான போட்டோ ஷூட்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிளாக் கோட் சூட்டில் செம கெத்தாக பல்வேறு ஸ்டைலான கோணங்களில் போஸ் கொடுத்தவாறு வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு பிரஷ்ஷான போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சில ஹீரோக்களும்
லாக் டவுனில் பல்வேறு ஹீரோயின்களும் தங்களது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் ஒரு சில ஹீரோக்களும் இந்த வேலையில் இறங்கியுள்ளனர்.

விஜய் போஸில்
செம ஸ்டைலிஸான காஸ்ட்யூமில் அனைவரும் அசந்து போகும் வகையில் பல்வேறு கோணங்களில் வசீகரிக்கும் போஸ் கொடுத்துள்ள சரவணன் இதில் கத்தி பட போஸ்டரை போன்று ஒரு கையை துப்பாக்கி போல வைத்து கத்தி விஜய் போஸில் மிரட்டியுள்ளார்.

புது போட்டோ ஷூட்
மேலும் சில போட்டோக்களில் சாக்லேட் பாய் போல சிரித்த முகத்துடன் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் சரவணன். இந்த புது போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ரசித்தவாறு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.