»   »  'சமூகத்துக்கு பயப்படாதது சாவுக்குத்தான் பயப்படும்' - கடும் கோபத்தில் காமெடி நடிகர்!

'சமூகத்துக்கு பயப்படாதது சாவுக்குத்தான் பயப்படும்' - கடும் கோபத்தில் காமெடி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிறுமி ஆசிபா பலாத்காரம், கமல், பிரகாஷ் ராஜ் குமுறல் #JusticeforAsifa

சென்னை : காஷ்மீர் சிறுமி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகச் சேர்ந்த பலரும் இந்த விஷயத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் இமயமலைப் பகுதியில் ஆடு மேய்க்கும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, இந்து மத அடிப்படைவாதிகளால் நான்கு நாட்களாக துன்புறுத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு ஐந்தாவது நாளில்தான் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

Actor Sathish opinion on kashmir girl brutal murder

இந்தச் செய்தி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலைக்கு நீதி கேட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளித்தனர். இந்த விவகாரம் பலரையும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷ் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டிருக்கிறார். "சிறுமியை கற்பழித்துக் கொன்றவர்களை பிடிக்காமல் விடமாட்டோம்.. ஆமா பிடிச்சுட்டு விட்ருவீங்க.. அவன் மூணு மாசத்துல வெளியே வந்து அதையே திரும்ப பண்ணுவான்.

புடிச்சி தூக்குல போடுங்க சார் இவனுங்கள.. 'சமூகத்துக்கு பயப்படாதது சாவுக்குத்தான் பயப்படும்' " எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். சதீஷின் கருத்தை ரசிகர்கள் பலரும் ஆமோதித்து வருகிறார்கள்.

English summary
Actor Sathish tweets about Kashmir young girl brutal murder.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X