»   »  ஃப்ரீ செக்ஸா?: ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் நறுக் பதில்

ஃப்ரீ செக்ஸா?: ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் நறுக் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதாராஜன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். பீட்டாவுக்கு எதிரா போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிரா போராட வெக்காத என நடிகர் சதீஷ் ட்வீட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளம் தலைமுறையினர் தொடர்ந்து 6வது நாளாக போராடி வருகிறார்கள். அறவழிப் போராட்டம் நடத்தும் அவர்களை நாடே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

உன்னத நோக்கத்துடன் போராடும் அவர்களை ஃப்ரீ செக்ஸை முன்வைத்து கொச்சைப்படுத்தி விமர்சித்த பீட்டா ஆதரவாளரான ராதா ராஜன் மீது நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ராதாராஜன்

ராதாராஜன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். பீட்டாவுக்கு எதிரா போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிரா போராட வெக்காத என நடிகர் சதீஷ் ட்வீட்டியுள்ளார்.

பெண்கள்

ராதாராஜன், உங்கள் வீட்டு பெண்கள் மெரினா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பார்கள் எங்கள் தமிழ் இளைஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்தாதே என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

பீட்டா

எங்க வீட்ல என்ன நடக்கணும்னு முடிவு பண்ண நீ யாருடா பீட்டா? ? #WeWantJallikattu #EngalUrimai #EngalKalaachaaram #SaveJallikattu என சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுங்கிற வார்த்தையை கேட்டு எவ்வளவு சந்தோஷப்பட்டோமோ அதே நேரம் பீட்டாங்கிற வார்த்தையை கேட்டு கேட்டு காண்டாகுது. எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்கணும். டாட் என்கிறார் சதீஷ்.

    English summary
    Actor Sathish has given befitting reply to PETA supporter Radharajan who insulted Jallikattu protestors.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil