twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டப்பாவின் கெட்டப்பை மறக்க முடியுமா..சத்யராஜின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்த கல்தூண் ராமச்சந்திரன்

    |

    சென்னை: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை போலவே மறைமுகமாக எத்தனையோ அற்புதமான உதவிகளை செய்துவருபவர் நடிகர் சத்யராஜ். ஒரு நடிகனாக, பெரியாரின் கொள்கைகளைக் கொண்ட ஒரு நடிகனாக, அதே சமயத்தில் பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகனாக வாழ்ந்து வருபவர் சத்யராஜ் என்று அவருடைய பிறந்த நாளான இன்றைக்கு அவரைப் பற்றிய பெருமைகளை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் கல்தூண் ராமச்சந்திரன்.

    கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் கோவையும் அதன் சுற்றுவட்டாரமும் நிறைய நடிகர்களையும், இயக்குநர்களையும், கதாசிரியர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளது. எத்தனையோ நடிகர்கள் கோயம்புத்தூரில் இருந்து வந்துதான் தமிழ் சினிமாவுக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்.

    Actor Sathyaraj 65th Birthday Anniversary

    சிவகுமார், சத்யராஜ், சத்யன், கவுண்டமணி, கோவை சரளா, மணிவண்ணன், சுந்தர் ராஜன், பாக்யராஜ், கோவை சரளா, போன்ற அற்புதமான நடிகர்களையும், இயக்குநர்களையும் தமிழ் சினிமாவுக்கு அளித்து பெருமை படுத்திய மாவட்டம் கோயம்புத்தூர் தான்.

    அப்படி பெருமை வாய்ந்த மண்ணில் இருந்து வந்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர் என்றால் அவர் நமது சத்யராஜ் தான். அவருடைய உண்மையான பெயர் ரங்கராஜ். திரைப்படத்துறைக்காக தன்னுடைய சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டார்.

    இன்றைக்கும் அவர் தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பை பாதுகாத்துக் கொண்டு, மக்கள் திலகத்தின் மீது வைத்துள்ள அளவிள்ளாத அன்பினால், அதுவும் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் உயிர். மற்றதெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான். மக்கள் திலகம் மறைந்த உடனடியாக கூடவே இருந்து கண்ணீர் சிந்திய நடிகர்களில், மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ் தான்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், மக்கள் திலகம் மறைவதற்கு முன்பு கலந்து கொண்ட திரையுலகம் சம்பந்தப்பட்ட கடைசி நிகழ்ச்சி சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொண்டது தான். ஜல்லிக்கட்டு வெற்றிவிழா நடந்தது டிசம்பர் 4ஆம் தேதி. மக்கள் திலகம் மறைந்தது டிசம்பர் 24ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    நேர்மறை எண்ணங்களே குழந்தைகள் விரைவில் குணமடைய காரணம்-ஆலியா பட்நேர்மறை எண்ணங்களே குழந்தைகள் விரைவில் குணமடைய காரணம்-ஆலியா பட்

    சத்யராஜ் செய்து வரும் உதவிகளை எல்லாம் நம்மாள் நினைத்து பார்க்கவே முடியாது. தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ அற்புதமான உதவிகளை எல்லாம் செய்து கொண்டிருப்பவர் நமது சத்யராஜ். மக்கள் திலகம் எப்படி கொடுத்து கொடுத் சிவந்த கைகளாக இருக்கிறாரோ, அதேபோல் நமது சத்யராஜும் மறைமுகமாக செய்யும் உதவிகளெல்லாம் அவர் கைகளை சிவக்க வைத்திருக்கிறது.

    அது மட்டுமில்லாமல், நடிகன் என்ற முறையில், திரையில், நடிகன் என்ற திரைப்படத்திலும், வால்டர் வெற்றிவேல் என்ற படத்திலும், பெரியாரின் கொள்கைகளைக் கொண்ட ஒரு நடிகனாக, அதே சமயத்தில் பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகனாக நடிப்பை வெளிப்படுத்தியவர் என்றால் அது சத்யராஜ் தான்.

    இன்றைக்கும் நாம் சத்யராஜைப் பற்றி பேசுகிறோம் என்றால், நடிப்புலகில் அன்று முதல் இன்றுவரை அவர் ஆற்றிய பங்குகளை நாம் சற்று நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு சாதாரண வில்லனாக அறிமுகமாகி, தன்னுடைய கலைத் திறமையால் படிப்படியாக முன்னுக்கு வந்து, கதாநாயகனாக இன்று தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி என பன்மொழி முகங்களைக் கொண்டு நடித்துக்கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ்.

    இன்றைக்கும் ஒரு கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவரை நாம் ஏற்க முடியும் என்றால், நிச்சயம் அது சத்யராஜ் தான். இத்தனை வயதிலும் மிக அற்புதமாக நடித்துக்கொண்டிருப்பவர் என்றால் அது சத்யராஜ் தான். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பாகுபலி திரைப்படம் தான்.

    இன்றைக்கும் பாகுபலி திரைப்படத்தைப் பற்றி நாம் சிலாகித்து பேசுகிறோம் என்றால். அதற்கு நிச்சயம் சத்யராஜ், அந்த படத்தில் ஏற்று நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரம் இல்லை என்றால் பாகுபலி படமே கிடையாது. கட்டப்பாவா அது. கெட்டப்பாக அவ்வளவு அற்புதமாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.

    அவ்வளவு அற்புதமான நடிப்புத் திறமையை கொண்டுள்ள இன்றைக்கு பிறந்த நாள் காணும் நடிகர் சத்யராஜுக்கு நமது ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    English summary
    Actor Sathyaraj is a person who has done some amazing things, like MGR. Satyaraj is an actor who has lived a life of Periyar's ideals, while Periyar is an actor. Kalthoon Ramachandran shared about Sathyaraj’s pride with our FilmiBeat readers for his birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X