»   »  அப்பா மாதிரி வரணும்... ‘வைஸ்’ கேப்டனை வாழ்த்திய பிரபு, சத்யராஜ்!

அப்பா மாதிரி வரணும்... ‘வைஸ்’ கேப்டனை வாழ்த்திய பிரபு, சத்யராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்முகபாண்டியன், அவரது தந்தை விஜயகாந்த் போன்று உருவாக வேண்டும் என நடிகர் பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘சகாப்தம்'. இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். சுரேந்திரன் டைரக்டு செய்கிறார்.

‘சகாப்தம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில், திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சண்முகபாண்டியனை வாழ்த்தினார்கள்.

சகஜமாக பழகக் கூடியவர்...

சகஜமாக பழகக் கூடியவர்...

விழாவில் நடிகர் பிரபு பேசும் போது, சண்முகபாண்டியன் அவரது அப்பாவைப் போல் திரையுலகில் வளர வேண்டும். விஜயகாந்த் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். அவரைப் போல் சண்முகபாண்டியன் உருவாக வேண்டும் என்றார்.

நன்றாக டான்ஸ் ஆடுகிறார்...

நன்றாக டான்ஸ் ஆடுகிறார்...

நடிகர் சத்யராஜ் பேசும் போது, ‘‘சினிமாவில் நடனம் தெரிந்தால் பெரிய நிலைக்கு வரலாம். சண்முகப் பாண்டியனுக்கு நடனம் நன்றாக வருகிறது. திறமையாக நடிக்கவும் செய்கிறார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆவதற்கான எல்லா விஷயங்களும் இருக்கிறது. விஜயகாந்தைப் போல் சண்முகப்பாண்டியன் வளர வேண்டும் என்றார்.

எல்லோருக்கும் கேப்டன்...

எல்லோருக்கும் கேப்டன்...

நடிகர் ஜெயம் ரவி பேசும் போது, ‘‘விஜயகாந்த் எங்களுக்கெல்லாம் கேப்டனாக இருக்கிறார். அவரிடம் அன்பு உண்டு. பாசம் உண்டு, என் வளர்ச்சியில் அக்கறை எடுத்து பல ஆலோசனைகள் சொன்னார். அப்பா மாதிரி சண்முகபாண்டியன் நடிக்க வேண்டும்'' என்றார்.

நெப்போலியன், விக்ரம் பிரபு...

நெப்போலியன், விக்ரம் பிரபு...

இந்த விழாவில் நடிகர்கள் நெப்போலியன், வாகை சந்திரசேகர், விமல், விக்ரம் பிரபு, நடிகை தேவயானி, உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள். ‘சகாப்தம்' படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் நேகா, சுப்ரா, மற்றும் நண்டு ஜெகன், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

English summary
Actor Sathyaraj wished Vijayakanth's son Shanmugapandian to have a great future in cinema industry
Please Wait while comments are loading...