For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராமச்சந்திரன் நண்பா.. நினைவுகள் என்றுமே நிலைத்து நிற்கும்.. நண்பனின் இறப்புக்கு சத்யராஜ் உருக்கம்!

  |

  சென்னை : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மூத்த நடிகராக திகழ்பவர் நடிகர் சத்யராஜ்.பன்முகம் கொண்ட சிந்தனையாளர்

  Recommended Video

  ராமச்சந்திரன் நண்பா.. நினைவுகள் என்றுமே நிலைத்து நிற்கும்.. நண்பனின் இறப்புக்கு சத்யராஜ் உருக்கம்!

  இன்னொரு வழியில் தொடர்ந்து பல வெள்ளிவிழா படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர்.இன்னமும் வலம் வருபவர்.

  வெளியானது மெமரீஸ் படத்தின் டீசர்.. மீண்டும் வித்தியாசமான கதைகளத்தில் நடிகர் வெற்றி வெளியானது மெமரீஸ் படத்தின் டீசர்.. மீண்டும் வித்தியாசமான கதைகளத்தில் நடிகர் வெற்றி

  நண்பா உன்னுடைய நினைவுகள் என்றுமே என் மனதில் நிலைத்து நிற்கும் என நெருங்கிய நண்பனின் இறப்புக்கு நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  நக்கலான பேச்சு

  நக்கலான பேச்சு

  ஹீரோ, வில்லன், வில்லாதி வில்லன், அப்பா வேஷம் என்று எந்த வேடம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடிய மிகச் சிறந்த நடிகரான சத்யராஜ் எப்பொழுதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் மிக பிஸியாக நடித்து வருகிறார். இவரது நக்கலான பேச்சுக்கும் இயல்பான நடிப்புக்கும் கொங்கு தமிழுக்கும் இன்றும் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தமிழில் சூர்யா 40, எம்ஜிஆர் மகன், பார்ட்டி, தீர்ப்புகள் விற்கப்படும், காக்கி மற்றும் தெலுங்கில் பக்கா கமர்சியல் சப்ஜெக்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.

  கோவை அரசு கல்லூரி

  கோவை அரசு கல்லூரி

  இந்த நிலையில் நெருங்கிய நண்பரின் இறப்புக்கு உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது : ராமச்சந்திரன் என்னோட கல்லூரி நண்பன் கோயம்புத்தூர்ல கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம்.. காலேஜ் லைஃப் முடிஞ்சதுக்கு அப்புறம் தொடர்பில்ல.. நான் சென்னைக்கு வந்துட்டேன் சினிமா வாய்ப்பு தேடி, ராமச்சந்திரன் டெலிஃபோன்ல சேர்ந்துட்டாரு.

  முக்கியமான பொறுப்பில்

  முக்கியமான பொறுப்பில்

  அதுக்கப்புறம் தம்பிக்கு எந்த ஊரு படத்தோட ஷூட்டிங்க்கு ஊட்டிக்கு போனப்போ ஊட்டி டெலிபோனில் ராமச்சந்திரன் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு அப்ப மறுபடியும் எங்களுடைய நட்பு ஆரம்பமாச்சு. அப்ப இருந்த எல்லா சினிமா கலைஞர்களுக்கும் ராமச்சந்திரன நல்லா தெரியும் ஏன்னா அப்போதெல்லாம் செல்போன் இல்லாத காலகட்டம் ஒரு ட்ரங்க் கால் பண்ணனும் எஸ்டிடி பண்ணனும்ன்னா டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல முக்கியமான பொறுப்பில் இருந்த ராமச்சந்திரன் ஒத்துழைப்பு ரொம்ப நல்லா இருக்கும்.

  மக்கள் திலகம் எம்ஜிஆர்

  மக்கள் திலகம் எம்ஜிஆர்

  அதனால மக்கள் திலகம் எம்ஜிஆர்-லிருந்து இந்த சத்யராஜ் வரைக்கும் எல்லா நடிகர்களும் அவருக்கு நல்லா பழக்கம். ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகரான நான் அவரோட போட்டோ எடுப்பதற்கு முன்னாடியே ராமச்சந்திரன் எடுத்துட்டாப்ல. நவரத்தினம் படத்துக்கு ஊட்டிக்கு ஷூட்டிங் வந்தப்போ எம் ஜி ராமசந்திரன் டெலிபோன் ராமசந்திரன் இணைத்து போட்டோ எடுத்து விட்டார்கள் . இவ்வளவு சீக்கிரம் ராமச்சந்திரனை பிரிவோம்னு நினைக்கல கொஞ்சம் உடம்பை கவனிக்காமல் விட்டுட்டார்னு நினைக்கிறேன்.

  உருக்கமான வீடியோ

  உருக்கமான வீடியோ

  எப்போதுமே உடலளவில் இருக்கும் நட்பு வேணும்னா மறைஞ்சி போகலாம் ஆனால் மனதளவில் இருக்கிற நட்பு என்னைக்குமே நிலைச்சு நிற்கும் . நினைவுகள் மறப்பதில்லை மரிப்பதும் இல்லை அல்லவா அதனால ராமச்சந்திரன் நினைவுகளும் மறக்கவும் மறக்காது மரிக்கவும் மறைக்காது. இவ்வாறு நண்பரின் இழப்புக்கு நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  நல்ல நண்பர்கள்

  நல்ல நண்பர்கள்

  கொங்கு தமிழ் பேசும் சத்யராஜ் என்றுமே தன் நண்பர்களை ,நண்பர்களின் குடும்பங்களை கைவிட்டது இல்லை . உண்மையான பாசத்துக்கு மரியாதை செய்பவர் . எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களது குடும்பங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்து வருபவர் சத்யராஜ் . நண்பர்களை மதிக்கும் நல்ல நடிகராக நல்ல மனிதனாக சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக இருக்கிறார் சத்யராஜ் என்பது மிகவும் பாராட்டத்தக்கது

  Read more about: actor sathyaraj
  English summary
  Actor Sathyaraja has put up a video on his friend's death.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X