Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷை வெச்சி படம் பண்றது இப்போ எனக்கு சவாலா இருக்கு!
சென்னை : இயக்குனர் செல்வராகவன் இப்பொழுது நடிகர் செல்வராகவனாக பீஸ்ட், சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷுடன் இணைந்து செல்வராகவன் பணியாற்றிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை,மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இன்றும் உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் 2,புது பேட்டை 2, நானே வருவேன் என செல்வராகவன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி கொண்டிருக்க இப்போதெல்லாம் தனுஷை வைத்து படம் பண்ணுவது ரொம்பவும் சவாலாக உள்ளது என செல்வராகவன் பேசியுள்ளார்
இது
வேறலெவல்
வெறியாட்டம்..
தம்பி
தனுசுக்கு
வில்லனாகிறாரா
அண்ணன்
செல்வராகவன்..
நானும்
நடிப்பேன்!

தனுஷ்- செல்வராகவன் கூட்டணி
முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குநர் செல்வராகவனுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை திருப்தி படுத்தி வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் நடிப்பில் வெளியான என்ஜிகே படத்தை இயக்கியிருந்தார்.
அடுத்ததாக ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தனுஷ்- செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைந்து அடுத்தடுத்து 3 படங்களில் பணியாற்ற உள்ளனர். அதில் முதல் படமாக நானே வருவேன் தற்போது தயாராகி வருகிறது.

புதுப்பேட்டை பாகம்-2
வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் ஹாரர் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 மற்றும் புதுப்பேட்டை பாகம்-2 என இந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்து பயணிக்க உள்ளது

நடிகராக
இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் இப்பொழுது நடிகர் செல்வராகவனாக மாறியுள்ளார் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி. அதைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன்,கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கும் சாணிக் காயிதம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது.

இப்போ எனக்கு சவாலா இருக்கு
இவ்வாறு இயக்குனராக இருந்து நடிகராக களம் இறங்கியிருக்கும் செல்வராகவன் நானே வருவேன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் இப்போதெல்லாம் தனுஷை வைத்து படம் இயக்குவது மிகவும் சவாலானதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

வியந்து போனேன்
துள்ளுவதோ இளமை படத்தில் 14 வயது சிறுவனாக இருந்த தனுஷை வைத்து இயக்கினேன். ஆனால் இப்போதுள்ள நடிகர் தனுஷுக்கு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தனுஷின் நடிப்பும், வளர்ச்சியும் என்னை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது நான் எதிர்பார்த்ததை விடவும் மிக நன்றாக படங்களை செய்து வருகிறார். சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போட்டோ ஷுட் நடத்தினார். அப்போது தனுஷின் நடிப்பைப் பார்த்து நான் வியந்து போனேன் என அந்தப் பேட்டியில் செல்வராகவன் தனுஷ் குறித்து கூறியுள்ளார்.