»   »  தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.. செம ஹேப்பி மோடில் செந்தில்!

தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.. செம ஹேப்பி மோடில் செந்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. 'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் மூன்றாவது படம் இது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது.

இப்படத்துக்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றே இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

 முக்கிய வேடத்தில் செந்தில்

முக்கிய வேடத்தில் செந்தில்

அனிருத் இசையமைத்துவரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்து வருகிறார்கள். சூர்யா இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகர் செந்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

"இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டதால் என்னிடம் கேட்டார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுடன் படம் முழுக்க வருவேன்.

 நானும் சூர்யாவும்

நானும் சூர்யாவும்

இந்தப் படத்தில் நானும் சூர்யாவும் ஒரே ஆபிஸில் வேலை பார்ப்போம். படத்தின் டூயட் காட்சிகளைத் தவிர எல்லா சீன்களிலும் சூர்யாவுடன் வருவேன். இந்தப் படம் தவிர, இன்னும் மூன்று படங்களில் கமிட் ஆகியிருக்கேன். மறுபடியும் நான் பிஸி ஆகிட்டேன்'' என்று கூறியிருக்கிறார் செந்தில்.

 கவுண்டருடன் சேருவாரா

கவுண்டருடன் சேருவாரா

செந்தில் தான் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மறுபடியும் கவுண்டமணியுடன் இணைந்து கலக்கினால் அதை கண்டு களித்து ரசித்து சிரிக்க மக்கள் இன்னும் வெயிட்டிங்கில்தான் உள்ளனர்.

English summary
Actor Senthil decides to continue acting in films. He played a comedy role in thaana serndha koottam directed by vignesh shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil