Don't Miss!
- News
"மீன் நழுவுதே".. இதான் காரணமா.. பாஜகவின் "சதுரங்க ஆட்டம்".. டெல்லி பறந்த மேட்டர்.. எடப்பாடிக்கு பிளஸ்
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
விஜய் மாஸ் ஹீரோ... ஆனா அந்த விசயத்துல அஜித் தான் டாப்: மாறி மாறி பேசிய வாரிசு பட நடிகர்!
சென்னை: 2023 பொங்கலில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸாக உள்ளதால், ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
விஜய்யின் வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளியும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை ஹெச் வினோத்தும் இயக்கியுள்ளனர்.
இந்நிலையில், வாரிசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள ஷாம், விஜய், அஜித் பற்றி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
இதுவரை
விஜய்
நம்பர்
1...
அப்போ
இனி
சிவகார்த்திகேயனா..?:
தில்
ராஜூவின்
அடுத்த
ஸ்கெட்ச்
இதுதானா?

குஷி டூ வாரிசு
2000ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் விஜய்யின் நண்பராக சில காட்சிகளில் முகம் காட்டி செல்வார் ஷாம். அதன்பின்னர் 12பி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கோலிவுட்டின் சாக்லெட் பாய் வரிசையில் இடம் பிடித்தார். ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன் என அப்போதைய டாப் ஹீரோயின்களுடன் டூயட் பாடியவர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, ஏபிசிடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விஜய் புகழ்பாடும் ஷாம்
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்த ஷாம், சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், வம்ஷி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் ஷாம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷாம் கேரியரில் வாரிசு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் புகழ் பாடியிருந்தார்.

விஜய் தான் நம்பர் 1
வாரிசு படத்தின் தயாரிப்பாளா தில் ராஜூ, விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என பேசியிருந்தார். அதை அப்படியே கையில் எடுத்த ஷாம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை புகழ்ந்து பேசியிருந்தார். அதேபோல், தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள ஷாம், அங்கேயும் விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ என அடித்துக் கூறியுள்ளார். விஜய்யுடன் நடித்தது எனக்கு பெருமையான விசயம் என்றும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித் தான் டாப்
அதேபோல் இந்த்ப் பேட்டியில் நடிகர் அஜித் பற்றியும் ஷாமிடம் கேட்கப்படுகிறது. அதற்குப பதில் கூறியுள்ள ஷாம், "நான் தழிழ், தெலுங்கு, கன்னடம் என நிறைய மொழிகளில் நடித்துள்ளேன், அங்கெல்லாம் என்னுடன் நடித்தவர்கள் அஜித் பற்றியும் பெருமையாக பேசியுள்ளனர். அஜித்துக்கு ரொம்பவே துணிச்சல் தான், அவருக்கு தன்னம்பிக்கையும் ரொம்பவே அதிகம். அதனால் தால் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலுடன் நடித்து வருகிறார். மற்ற நடிகர்களெல்லாம் வெள்ளை முடி வந்தால் டை அடிக்கும் நிலையில், அஜித் மட்டும் தான் அப்படியே இருக்கிறார்? என சொன்னதுண்டு. அதனால் தான் சொல்கிறேன், அஜித் தான் இந்த மாதிரி விசயங்களில் டாப் என ஷாம் எனக் கூறியுள்ளார்.