»   »  அபூர்வ சகோதரர்கள் கமல் போல் குள்ளமாக நடிக்கும் ‘கிங்‘ கான்!

அபூர்வ சகோதரர்கள் கமல் போல் குள்ளமாக நடிக்கும் ‘கிங்‘ கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
குள்ளமாக நடிக்கும் ‘கிங்‘ கான்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனை போல் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கும் ஜீரோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இதில் ஒரு கமல் நார்மலாகவும் மற்றொரு கமல் குள்ளமாகவும் இருப்பார்கள்.

Actor Shah Rukh Khan acting as dwarf man in a movie named Zero

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் குள்ள மனிதராக நடிக்கிறார். 'ஜீரோ' என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார் ஷாருக்கான்.

குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தனுஷ் நடித்த 'அம்பிகாபதி', மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு' படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படம் இதுவாகும்.

இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடிப்பதால் ஜீரோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஷாருக்கானை குள்ள மனிதராக காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. காதலை மையப்படுத்தி ஜீரோ படம் உருவாகிறது.

English summary
Actor Shah Rukh Khan acting as dwarf man in movie named Zero. Zero film's shooting is going on well with Shah Rukh Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil