»   »  சகிப்புத்தன்மை விவகாரம்: ஷாரூக்கான் வீட்டு முன் போலீஸ் குவிப்பு

சகிப்புத்தன்மை விவகாரம்: ஷாரூக்கான் வீட்டு முன் போலீஸ் குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இதுவரை இல்லாத அளவிற்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகவும் வெகுவாகக் குறைந்து வருகிறது என்னும் கருத்திற்கு தனது ஆதரவை ஷாரூக்கான் தெரிவித்து இருந்தார். மேலும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

Actor Shah Rukh Khan Residence Security

ஷாரூக்கானின் இந்தக் கருத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார். மேலும் பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் ‘‘ஷாருக்கான் தேச விரோதி, அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது" என்று கருத்துத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சிவசேனா, காங்கிரஸ், பாலிவுட் சக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் ஷாரூக்கானிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் ஷாரூக்கான் வீட்டின் தற்போது முன்னர் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறியபோது சுமார் 50 போலீசார் அவரது வீட்டு முன்னர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 75 போலீசார் அவரது வீட்டு முன்னர் குவிந்து 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் லேசான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actor Shah Rukh Khan Residence in Mannat, Mumbai Police Provided the Actor House and Increased the Security Level.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil